அன்பில் மகேஷுக்கு நவ்.2 வரை போலீஸ் காவல்!
1 hour before
<p>முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை நவம்பர் 2-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p><p>தமிழ்நாட்டில் 1000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் மோசடி நடந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த அக்டோபர் 26-ஆம் தேதியன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.</p><p>இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து அன்பில் மகேஷை சுமார் 4 மணிநேரம் விசாரித்த அதிகாரிகள், அன்று இரவே ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்பு ஆஜர்படுத்தினர். விசாரணையை தொடர்ந்து, அன்பில் மகேஷை நவம்பர் 6ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.</p><p>இந்த நிலையில், அன்பில் மகேஷ் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையை தொடர்ந்து, அன்பில் மகேஷுக்கு நவம்பர் 2-ஆம் தேதி வரை போலீஸ் காவல் விதித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
