தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டம்

27 Oct 2026, 9:51 pm
அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டம்

அன்பில் மகேஸை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டம்

சென்னை, அக்.27 -கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. உள்ளிட்ட அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததாகத் தனியார் பள்ளிகள் சங்கம் புகார்அளித்தது.

இதன் அடிப்படையில், அன்பில் மகேஸின் வீடு உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து 7 மணி நேரம் விசாரித்தனர். வழக்கை ரத்து செய்யக் கோரியும், முன்ஜாமீன் கோரியும் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு,நள்ளிரவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றக் காவல்

நீதிபதி சத்தியமூர்த்தி, குற்றத்துக்கான ஆதாரம் இருப்பதாக அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று, நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல் விதித்தார். அவருக்கு முதல் வகுப்புச் சிறை, தரமான உணவு, தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கணைய பாதிப்பு இருப்பதால் எண்ணெய், புரதம் இல்லாத உணவு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். கைதை எதிர்த்து அன்பில் மகேஸ் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

காவல் மனு

கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரிப்பதற்காக, ஓரிரு நாட்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மு.க. ஸ்டாலின் கண்டனம்

அன்பில் மகேஸ் கைதுக்கு தவெக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,சட்டம்-ஒழுங்கு, நிர்வாகச் சீர்கேடுகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்த கைது எனக் குற்றம் சாட்டியுள்ளார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்தவரைக் கைது செய்தது அரசியல் காழ்ப்புணர்வு என்றும், குற்றச்சாட்டுகளை அன்பில் மகேஸ் சட்டப்படி எதிர்கொள்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.