அனருலின் இறுதிப் பயணம்: எல்லைகள் கடந்த வர்க்கப் பாசம்!
31 Jan 2026, 3:56 pm
<p><strong>அனருலின் இறுதிப் பயணம்: எல்லைகள் கடந்த வர்க்கப் பாசம்!</strong></p>
<p>“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரிகளுக்குப் பின்னால் இன்று பெரும் கண்ணீர் ஒளிந்திருக்கிறது. பிழைப்புக்காகப் பல்லாயிரம் மைல்கள் கடந்து, மேற்கு வங்க மண்ணிலிருந்து தமிழ கத்திற்கு வந்த அனருல் என்ற கட்டுமானத் தொழிலாளியின் மூச்சு, பாதியிலேயே நின்று போனது. அந்தத் தொழிலாளியின் உயிரற்ற உடலை அநாதையாக விடாமல், கம்யூனிச இயக்கத்தின் செங்கொடிகள் கவசமாக சூழ்ந்து நின்ற நெகிழ்ச்சியான நிகழ்வு இது. ஒரு தந்தியால் இணைந்த இரு மாநிலங்கள் கடந்த 21-01-2026 அன்று, திண்டுக்கல் மாவட்டம் குஜிலி யம்பாறை - டி.கூடலூரில் வேலை செய்த மேற்கு வங்கத் தொழிலாளி அனருல் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தி, சிஐடியு அகில இந்தியத் தலைவர் சுதீப் தத்தா மூலம் மாநிலத் தலைமைக்கு எட்டியது. அடுத்த சில நிமிடங்க ளில், திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டத் தோழர்கள் களத்தில் நின்றனர். மொழி புரியவில்லை, முகம் தெரியாது; ஆனால், அவர் ஒரு “தொழிலாளி” என்ற ஒற்றை அடையாளம், எங்களைக் கல் நெஞ்சையும் கரைக்கச் செய்யும் வர்க்கக் கடமையை நோக்கி உந்தித்தள்ளியது. குஜிலியம்பாறை ஒன்றியத் தோழர்கள் உடனடியாகக் காவல் துறையிடம் பேசி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஏற்பாடு செய்தனர். அடுத்த நாள் காலை, காவலர்களோடு இணைந்து கரூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டது. இந்த இக்கட்டான சூழலில், லாப நோக்கைத் தாண்டி மனிதநே யத்தோடு செயல்பட்ட அந்தப் பொறியாளர்களுக்கும் ஒப்பந்த தாரர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும். இறந்த அன ருலின் மனைவிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதியையும், உடலை வானூர்தி மூலம் கொண்டு செல்லத் தேவையான செலவையும் அவர்கள் இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டனர். ஆச்சரியப்பட்ட கண்கள்: “இதுதான் கம்யூனிசம்!” அனருலின் உடல் பெங்களூரு வழியாக வானூர்தியில் ஏறியது. தன் வாழ்நாளில் ஒருமுறையாவது வானில் பறக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்திருக்குமோ என்னவோ... ஆனால், அவரது முதல் பயணமும் கடைசிப் பயண மும் மரணத்திற்குப் பின் நிகழ்ந் தது ஒரு வரலாற்றுச் சோகம். பணி களை முடித்துக் கிளம்புகையில் ஒப்பந்ததாரர்கள் வியப்போடு கேட்டார்கள், “உங்களுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒருவருக் காக எப்படி இவ்வளவு அக்கறை யோடு நிற்கிறீர்கள்?” என்று. எங்கள் பதில் தீர்க்கமாக இருந்தது: “எங்கள் சாதியோ, மதமோ, மொழி யோ பேச வேண்டிய அவசிய மில்லை; எல்லாவற்றையும் கடந்து அவர் ஒரு மனிதர், ஒரு தொழிலாளி. இந்த வர்க்க உணர்வு தான் எங்கள் கட்சி எங்களுக்குக் கற்பித்த பாடம். உலகம் முழு வதிலும் கம்யூனிஸ்டுகள் இப்படித் தான் இருப்பார்கள். இது எங்க ளுக்குச் சேவை அல்ல, எங்கள் இயல்பு!” தமிழக அரசுக்கு கோரிக்கைகள் ஒரு தொழிலாளியின் மரணம் சில முக்கியக் கேள்விகளை அர சுக்கு முன்வைக்கிறது. தமிழக அரசு, புலம்பெயர் தொழிலா ளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தனிச் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். நலவாரிய அட்டை இல்லாவிட்டாலும், காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை யை ஆதாரமாக வைத்து நிவாரண நிதி வழங்கிட வேண்டும். அரசு செலவிலேயே உடலைச் சொந்த ஊருக்கு அனுப்பும் நிரந்தர ஏற்பாட்டைச் செய்வதோடு, ஒவ் வொரு மாவட்டத்திலும் இவர்க ளுக்காகப் பன்மொழி உதவி மையத்தையும், தனி அதிகாரி களையும் நியமிக்க வேண்டும். அனருலின் உடல் மேற்கு வங்கத்தை அடைந்திருக்கலாம். ஆனால், தமிழகச் செங்கொடித் தோழர்கள் காட்டிய அந்த மனிதா பிமானம், எல்லையற்ற வர்க்கப் பாசத்தின் அடையாளமாக என்றும் நிலைத்திருக்கும். ஒரு உயிர் போன பின் விழித்துக் கொள்வதை விட, பல்லாயிரம் அனருல்கள் இங்கே பாதுகாப்பாகப் பணியாற்றுவதை உறுதி செய்வதே அரசின் கடமை. பெ.பாலசுப்பிரமணி, திண்டுக்கல் மாவட்டத் தலைவர், இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு)</p>
