முந்தய பக்கம்

வீட்டை சேதப்படுத்தி அராஜகம்

10 Nov 2025, 2:46 pm
வீட்டை சேதப்படுத்தி அராஜகம்
<p><strong>வீட்டை சேதப்படுத்தி அராஜகம்</strong></p> <p>சேலம், நவ.10- வீட்டை சேதப்படுத்தி அராஜகத்தில் ஈடுபடுபவர் மீது நடவடிக்கை எடுக் கக்கோரி, பாதிக்கப்பட் டோர் சேலம் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சேலம் மாவட்டம், அக்கரை பாளையம், பாலம்பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதியில் வீடு &nbsp;கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் உறவினர் &nbsp;ஒருவர், இவருக்கு சொந்தமான நிலத்தில் கம்பி வேலி அமைத்தும், வீட்டை சேதப்படுத்தியும் தொடர்ந்து அரா ஜகப்போக்கில் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து மல்லூர் &nbsp;காவல் நிலையத்தில் புகாரளித்தும், இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தங்களது வீட்டை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என &nbsp;வலியுறுத்தி பாதிக்கப்பட்டோர் திங்களன்று ஆட்சியர் &nbsp;அலுவகத்தில் மனு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram