ஆனைமலையாறு – நல்லாறு திட்டம்: கேரளம் செல்கிறது அமைச்சர்கள் குழு
4 Oct 2026, 10:58 pm

ஆனைமலையாறு – நல்லாறு திட்டம்: கேரளம் செல்கிறது அமைச்சர்கள் குழு

சென்னை, அக்.4 -ஆனைமலையாறு – நல்லாறு திட்டம் தொடர்பாகக் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழக அமைச்சர்கள் குழு அக்.5-இல் கேரளம் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தலைமையிலான இக்குழுவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளதாகவும், கேரள முதலமைச்சரைச்சந்தித்துப் பேசுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

தமிழகம்–கேரளம் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், காமராஜர் முதலமைச்சராக இருந்த காலத்தில் பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டம் தொடங்கப்பட்டது. மொத்தம் 12 அணைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டதில், ஆனைமலையாறு – நல்லாறு அணை மட்டும் இன்னும் அமைக்கப்படவில்லை.

கேரளத்தில் இடமலையாறு அணை கட்டி

முடிக்கப்பட்ட பிறகே தமிழகப் பகுதியில் ஆனைமலையாறு அணையைக் கட்ட வேண்டும் என ஒப்பந்தத்தில் நிபந்தனை உள்ளது. இடமலையாறு அணை கட்டப்பட்டதாகக் கூறப்பட்டாலும் திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலையின் உபரிநீரை முழுமையாகப் பாசனத்துக்குப் பயன்படுத்த முடியவில்லை.இத்திட்டம் நிறைவேறினால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கடலில் வீணாகக் கலக்கும் நீரைப் பாசனத்துக்குத் திருப்புவதன் மூலம் விவசாயிகளின் நீண்ட காலத் தேவைக்குத் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சந்திப்பில் திட்டத்தை முன்னெடுக்க கேரளத்தை வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிகிறது.