தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கணக்கீட்டுப் படிவத்தை திரும்பப் பெற நவ.23 கடைசி நாள் என மறைமுக உத்தரவு?

23 Nov 2025, 3:44 pm
கணக்கீட்டுப் படிவத்தை திரும்பப் பெற  நவ.23 கடைசி நாள் என மறைமுக உத்தரவு?

கணக்கீட்டுப் படிவத்தை திரும்பப் பெற  நவ.23 கடைசி நாள் என மறைமுக உத்தரவு?

50 சதவிகித வாக்குகள் பறிபோகும் அபாயம்

விருதுநகர், நவ.23 - தமிழகத்தில் தீவிர வாக்காளர் திருத்தப் பணியில் கணக்கீட்டுப் படிவத்தை நிரப்பி திரும்பப்  பெறும் கால அவகாசம் டிச.4 என அறிவித்துள்ள நிலையில் ஞாயிறுடன் (நவ.23) கடைசி நாள் என  தேர்தல் ஆணையம் மறைமுகமாக உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு கட்சிகளின் எதிர்ப்பு களையும் மீறி  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.  முதற்கட்டமாக கடந்த நவம்பர் 4ஆம்  தேதி முதல் கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர் களுக்கு வழங்கும் பணியானது நடைபெற்று வந்தது. இப்பணிகள் முறையாக. சரிவர நடை பெறவில்லை என ஏராளமானோர் புகார் தெரிவித்த னர். இருந்தபோதும், சுமார் 98 சதவிகித படிவங்கள்  வாக்காளர்களிடம் நேரடியாக வழங்கப்பட்டு விட்ட தாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை  சம்மந்தப்பட்ட வாக்குச்  சாவடி மையங்களில் நிரப்பிய கணக்கீட்டுப் படி வங்களை வாக்காளர்கள் வழங்கலாம் என தேர்தல்  ஆணையம் அறிவித்தது. மேலும் அங்கு வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள்  பணியில் இருப்பார்கள்,  படிவத்தை நிரப்ப உதவி புரிவார்கள் எனவும் கூறப்பட்டது. ஆனால், அப்பணியும் சரிவர நடை பெறவில்லை.   ஏனெனில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ  இணையதளத்திற்குள் செல்லும்  வாக்கா ளர்கள், தாங்கள் ஏற்கனவே வசித்து வந்த ஊர்  மற்றும் பகுதியை ஞாபகப்படுத்திப் பார்த்து, அதில்  தங்களது பெயர் அல்லது உறவினர்களின் பெயர்  உள்ளதா என  நீண்ட நேரம் தேடும் நிலை உள்ளது.  இதன் காரணமாக, சுமார் 50சதவிகிதம் கூட  பூர்த்தி  செய்த படிவங்கள் திரும்ப வரவில்லை. நிலைமை இவ்வாறு இருக்க, தேர்தல் ஆணை யமானது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மறைமுக உத்தரவை உயர் அதிகாரியின் கை யொப்பமின்றி எழுத்துப்பூர்வமாக வழங்கியுள்ளது. அதில் நவ.23 க்குள் அனைத்துப் படிவங்க ளையும் வாங்கி முடிக்க வேண்டும்; அதன் பிறகு,  அதாவது வந்த படிவங்களை நவ.24 முதல் டிசம்பர்  4 வரை தேர்தல் ஆணையத்தின் இணையதளத் தில் பதிவேற்றம் செய்யும் பணியினைச் செய்திட  வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அனைத்து வாக்குச் சாவடி நிலை அலுவலர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். ஏற்கனவே, நிரப்பிப் பெற்றப் படிவங்களையே, தேர்தல் ஆணையத்தின் சர்வர்  சரிவர இயங்காத காரணத்தால் பதிவேற்றம் செய்ய முடியவில்லை. மேலும், வாக்காளர்களி டம் நவ.23க்குப் பின் படிவங்களை வாங்கிவிட்டு,  இறுதிப்பட்டியலில் வாக்குகள் வரவில்லையென் றால், நாம் தான் நேரடியாக  மக்களிடம் பதில் சொல்ல வேண்டியது வரும் எனவும் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எனவே, தமிழகத் தேர்தல் ஆணையமா னது, இதுபோன்ற மிரட்டலான மறைமுக உத்தரவு களை வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு விடுவதை தவிர்க்க வேண்டும். வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இதேநிலை  நீடித்தால் சுமார் 50சதவிகித வாக்காளர்களின் பெயர் இறுதிப் பட்டியலில் இடம் பெறாத நிலையே  ஏற்படும்.  கணக்கீட்டுப் படிவங்களை திரும்ப பெறுவ தற்கான கால அவகாசத்தையும், இறுதிப் பட்டியல்  வெளியிடுவதற்கான கால அவகாசத்தையும் நீட்டிப்பு செய்திட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.      (ந.நி)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.