தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இயற்கை ஒலிகளுக்காக ஓர் கண்காட்சி

29 Nov 2025, 1:28 pm
இயற்கை ஒலிகளுக்காக ஓர் கண்காட்சி

இயற்கை ஒலிகளுக்காக ஓர் கண்காட்சி

வண்ணத்துப்பூச்சிகள் முதல் காற்றாலைகள் வரை உலகின் பாரம்பரிய ஒலிகளை பாதுகாக்க பாரம்பரிய ஒலி பாதுகாப்புத்  திட்டம் (Sonic heritage project) என்ற பெயரில் ஒரு நிகழ்நிலை கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மச்சு பிச்சு (Machu Picchu), தாஜ் மஹால் போன்ற உலகப் பாரம்பரிய இடங்களின் ஒலிகளும் இயற்கை சரணாலயங்கள் அமைந்துள்ள நிலப் பரப்புகளின் ஒலிகளும்  பாதுகாக்கப்படுகின்றன. அமேசான் காடுகளில் பறவைகளின் அதிகாலை அழைப்புகள்

அமேசான் மழைக் காடுகளில் வாழும் பறவை களின் அதிகாலை அழைப்புகள் (dawn corus) உள்ளிட்ட உலகப் பாரம்பரிய இடங்களில் அமைந்துள்ள நிலப் பரப்புகளின் சத்தங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. 68 நாடுகளில் இருந்து 270 ஒலிகள் இத்திட்டத்தின் கீழ் இடம்பெற்றுள்ளன. ஐ.நாவின் கல்வி சமூக கலாச்சார அமைப்பின் (UNESCO) பாரம்பரிய இடங்கள் பட்டியலில் உள்ள மச்சு பிச்சு , தாஜ் மஹால் போன்ற புகழ்பெற்ற பாரம்பரிய இடங்களின் சத்தங்கள் மற்றும்  மெக்சிகோவின்  எல் ரோசா ரியோ (El Rosario) மோனார்க் வண்ணத்துப்பூச்சி கள் (monarch butterfly) சரணாலயம், கொலம்பியா அமேசான் காடுகள் போன்ற இயற்கையாக அமைந்துள்ள நிலப் பரப்புகளில் இருந்து சேகரிக்கப்பட்ட ஒலிகள் இங்கு உள்ளன. “உலகப் பாரம்பரிய இடங்களைப் பற்றி நினைக்கும் போது காணொலிகளைப் பற்றி  மட்டுமே நாம் சிந்திக்கிறோம். இந்த இடங்க ளின்ஒலிகளைப் பற்றி நாம் அக்கறைப்படு வதில்லை” என்று ஆக்ஸ்போர்டு ஒலிக்  கலை ஞரும் உலகளவில் உள்ள மிகப் பெரிய கள  ஒலிப்பதிவுக் களஞ்சியங்களில் ஒன்றான நக ரங்கள் மற்றும் நினைவு (Cities and Memory)  என்ற அமைப்பின் தோற்றுநருமான ஸ்டூவர்ட் ஃபௌக்ஸ் (Stuart Fowkes)  கூறுகிறார். “கேட்போரை அந்தச்  சூழ்நிலைக்கு அழைத்துச் சென்று அதில் அவரை மூழ்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்த ஒரு அற்புத சக்தி என்பதே ஒலியின் விலைமதிக்க முடியாத சிறப்பம்சம். அந்த இடத்தின் புகைப்படம், காட்சிப்படுத்தல் அல்லது ஓரளவிற்கு காணொலிகள் செய்யாத வேலையை ஒரு ஒலிப்பதிவு செய்கிறது. நாம்  அந்த இடத்தில் இருப்பது போன்ற அனுபவத்தை  அது நமக்குள் ஏற்படுத்தும். ஒலி பயணம் செய்யும் இயல்புடையது. இதன் உதவியுடன் அந்த இடத்தின் உண்மையான உணர்வுகளை நாம் பெறமுடியும். இந்த திட்டம் இயற்கையான வாழ்வியல் சூழல் மற்றும் விலைமதிப்பில்லாத நினைவுச்  சின்னங்களை அவை இருப்பது போன்ற அதே  நிலையில் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டி ருப்பதால் இந்த நிகழ்நிலை கண்காட்சியில் மொத்தமுள்ள 270 பதிவுகளில் ஐந்தில் ஒரு பகுதியும் இயற்கையில் காணப்படும் ஒலிப் பரப்புகளைக் கொண்டுள்ளன. காட்டில் இலை உதிரும் ஒலி முதல் வெந்நீர் ஊற்று பீச்சியடிக்கும் சத்தம் வரை கண்காட்சிக்கு வருகை தருவோர் குவாத மாலாவில் (Guatemala) உள்ள டிக்கால் (Tikal)  என்ற புராதன நகரத்தில் இலைகள் உதிரும் ஒலியைக் கேட்கலாம். இந்தியாவின் எல்லோரா குகைகளில் வௌவால்கள் எழுப்பும் கீச்சொலி களைக் கேட்கலாம். மொராக்கோவில் சுவர்கள்  எழுப்பப்பட்டுள்ள  (walled city) எஸ்ஸா வோயுரா (Essaouira) நகரத்தில் அலைகள் சுவர்  மீது வந்து மோதும் ஒலியை கேட்டு இரசிக்கலாம் அல்லது யு எஸ் யெல்லோ ஸ்டோன் தேசியப் பூங்காவில் நிலத்தில் இருந்து வெந்நீர் ஊற்று பீச்சியடிக்கும் சத்தத்தைக் கேட்கலாம். பெரும்பாலான யுனெஸ்கோ பாரம்பரிய இடங்கள் அரிய வகை உயிரினங்களை பாது காப்பதை நோக்கமாக கொண்டு செயல்படு கின்றன. இந்த இடங்கள் அரிய வகை வன உயி ரினங்களின் குறிப்பிடத்தக்க வலசைப் பாதை கள், வாழிடங்களை பாதுகாக்கின்றன. எடுத்துக்  காட்டு அரிய வகை சாம்பல் நிற திமிங்கலங்க ளின் இனப்பெருக்க இடமாக இருக்கும் மெக்சி கோவின்  எல் விஸ்கேனோ (El Vizcaíno) சரணா லயம். இந்த இடத்தில் பதிவு செய்யப்பட்ட ஒலி கள் மகத்தானவை. இயற்கைப் பரப்புகளின் ஒலிகளைப் பிடித்தெடுப்பது, ஆவணப்படுத்துவது தவிர இந்த கண்காட்சி மனிதன் ஏற்படுத்தும் இரைச்சல்கள் எவ்வாறு இயற்கை ஒலி உருவாகும் இடங் களை ஆக்கிரமிக்கிறது என்பதையும் எடுத்துக்கூறு கிறது. புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் மூலம் என்ற வகையில் காற்றாலை ஒரு சாதனை. என்றா லும் ஆஸ்திரேலியா நிங்களூ (Ningaloo) கரை யோரம் அமைந்துள்ள காற்றாலை எழுப்பும் ஓசை அந்த இடத்தின் இயற்கைச்  சூழலை ஊடுருவுகிறது. இது அங்கு வாழும் உயிரினங்களை பாதிக்கிறது. இந்த சிக்கலான பிரச்சனையை சம நிலையுடன் காணவேண்டும்” என்று ஃபௌக்ஸ் கூறுகிறார். கடந்த ஆறாண்டுகளாக அவர் தன்  சொந்த சேகரத்தில் இருந்து மீட்டெடுத்த இயற்கை  ஒலிகளை காட்சிப்படுத்தியுள்ளார். மெக்சிகோ வின் எஸ்பிரிட்டு சாண்டோ (Espíritu Santo) தீவில்  வாழும் கடற்சிங்கங்கள் எழுப்பும் ஒலி இங்கு காட்சிக்காக உள்ள ஒலிப்பதிவுகளில் ஒன்று. “சுற்றுலா ஒலிப் பன்மயத்தன்மையை பாதிக்கி றது. ஒரு இடம் எவ்வாறு இருக்கும் என்பதை கேட்போருக்கு அவர் கேட்கும் ஒலியை வைத்தே உணர்த்த அதிக உழைப்பு தேவைப்படுகிறது. ஒலியின் மீது நாம் கவனம் செலுத்தவேண்டும். இயற்கை அதை எவ்வாறு பாதுகாக்கிறது என் பதை அறியவேண்டும். மிதமிஞ்சிய சுற்றுலா ஒரு இடத்தின் ஒலிகளுடன் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் இயற்கையான ஒலிகளின் இயல்பான தன்மை அழிகிறது” என்று ஃபௌக்ஸ் கூறுகிறார். ஒலி  மாசு நகரங்களிலும் கிராமங்களிலும் மட்டும் இல்லை. இயற்கை ஒலிகள் ஏற்படும் எல்லா பரப்பு களிலும் உள்ளது. இயற்கையை பாதுகாப்பது போலவே அந்த இடத்தின் ஒலியையும் பாது காக்கவேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.