‘செங்கொடி நிழலில் சடங்குகள் இல்லா சமத்துவ பந்தம்’
28 Jan 2026, 2:33 pm
<p><strong>‘செங்கொடி நிழலில் சடங்குகள் இல்லா சமத்துவ பந்தம்’</strong></p>
<p>ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி நவாஸ் செரீப் மற்றும் கொளாநல்லி மணிமேகலை ஆகியோருக்கு, ஈரோடு சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் புதனன்று, சமய, சடங்குகளை மறுத்து முற்போக்கு திருமணம் நடைபெற்றது. விடுதலை வேங்கைகள் கட்சியின் மாநிலத்தலைவர் இரா.தமிழின்பன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கோமதி, ஆர்.விஜயராகவன், எஸ்.சுப்ரமணியன், பி.சுந்தரராஜன், விவேக மாநிலப்பொருளாளர் சவுந்தரராசன், இளைஞரணி அமைப்பாளர் முஸ்தபா, மாநகரத் தலைவர் வேங்கை நடராசு, திருப்பூர் மாவட்டச் செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.</p>
