தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்வராயன் மலையில் செங்கொடி ஏந்தி மீட்கப்பட்ட 200 ஏக்கர் நிலம் வாழப்பூண்டி கிராம மக்கள் நடத்திய உணர்ச்சிமிக்க பாராட்டு விழா!

7 Mar 2026, 2:36 pm
கல்வராயன் மலையில் செங்கொடி ஏந்தி மீட்கப்பட்ட 200 ஏக்கர் நிலம் வாழப்பூண்டி கிராம மக்கள் நடத்திய உணர்ச்சிமிக்க பாராட்டு விழா!
<p><strong>கல்வராயன் மலையில் செங்கொடி ஏந்தி மீட்கப்பட்ட 200 ஏக்கர் நிலம் வாழப்பூண்டி கிராம மக்கள் நடத்திய உணர்ச்சிமிக்க பாராட்டு விழா!</strong></p> <p>கள்ளக்குறிச்சி,மார்ச் 6 கள்ளக்குறிச்சி மாவட் டம் கல்வராயன் மலையில் உள்ள வாழப்பூண்டி கிரா மத்தில், ஒரு நீண்ட நெடிய வரலாற்றுச் சிறப்புமிக்க நில மீட்புப் போராட்டம் வெற்றி யில் முடிந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மலைவாழ் மக்களின் 200 ஏக்கர் நிலங்களைச் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்திருந்த சேலத்தைச் சேர்ந்த எஸ்டேட் அதிபர் வினோதன் கந்தையாவி டமிருந்து, அந்த நிலங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கமும் மீட்டெடுத்துள்ளன. இந்த வெற்றியை முன்னிட்டு, போராட்டக் களத்தில் நின்ற தலைவர்களுக்கும், நீதி மன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர்களுக்கும் வாழ ப்பூண்டி கிராம மக்கள் சார்பாக எழுச்சியான பாராட்டு விழா நடைபெற்றது. 20 ஆண்டுகால போராட்ட வரலாறு &nbsp;இந்த வெற்றி விழா நிகழ்வு தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வி.அண்ணாமலை தலை மையில் நடைபெற்றது. விழா வில் கலந்துகொண்டு சிறப்பு ரையாற்றிய மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலை வர் பி.டில்லிபாபு, இந்த வெற்றியின் பின்னணியில் உள்ள 20 ஆண்டுகால வலி களையும் போராட்டங் களையும் விவரித்தார். வினோதன் கந்தையா என்ற நிலச்சுவன்தார், 1979-ம் ஆண்டின் 561-ம் எண் அரசா ணைக்கு (15-40) முரணாக, பழங்குடியின மக்களின் நில ங்களை அபகரித்து வேலி அமைத்திருந்ததைச் சுட்டிக் காட்டிய அவர், மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் தலை மையில் நடந்த தொடர் போராட்டங்களும், நீதிமன்ற வாதங்களுமே இன்று உயர்நீதிமன்றத்தில் இந்தச் &nbsp;சவுக்கடி தீர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளதாகக் குறிப் பிட்டார். வழக்கறிஞர்களுக்கு பாராட்டு இந்தச் சட்டப் போராட் டத்தைத் திறம்பட முன்னெடுத்து வெற்றி தேடி த்தந்த கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் வி.ராஜா, சென்னை உயர் நீதிமன்ற &nbsp;வழக்கறிஞர்கள் காரல் மார்க்ஸ் மற்றும் எல்.பர்வீன் பானு ஆகியோருக்குக் கிராம மக்கள் நெகிழ்ச்சி யுடன் பாராட்டு தெரிவித்தனர். மீட்கப்பட்ட 33 ஏக்கர் நிலத்தில் இன்னும் இரண்டு வாரத்திற்குள் மக்கள் விவ சாயம் செய்யவோ அல்லது குடியமரவோ தேவை யான அனைத்து ஏற்பாடு களையும் கட்சி செய்யும் என்றும், மீதமுள்ள நிலங்க ளையும் நிலமற்ற ஏழைப் பழங்குடியினருக்கு அடுத்த மூன்று வாரத்திற்குள் முறை யாகப் பிரித்துக் கொடுக்கும் பணிகளைச் சங்கம் மேற் கொள்ளும் என்றும் உறுதி யளிக்கப்பட்டது. இந்த விழாவில், தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, &nbsp;மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஆனந்தன், மலைவாழ் மக்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஏ.பொன்னு சாமி, &nbsp;சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ஏழு மலை, மலைவாழ் மக்கள் சங்க மாநிலக் குழு உறுப்பி னர் என்.கிருஷ்ணமூர்த்தி, தீண்டாமை ஓழிப்பு முன்ன ணியின் மாவட்டத் தலைவர் வே.ஏழுமலை ஆகியோர் &nbsp;உரையாற்றினர். மேலும், களத்தில் உறு துணையாக நின்ற சிபிஐ(எம்) சங்கராபுரம் ஒன்றியச் செயலாளர் செ.சிவாஜி, கருமந்துறை செயலாளர் ஏ.பாக்கியராஜ் மற்றும் கல்வராயன் மலை கமிட்டி நிர்வாகிகளான ஏ.செல்வராஜ், எஸ்.அண்ணாமலை, ஏ.ராமன், சடையன், லட்சுமணன், ஆண்டி, ராமச்சந்திரன், பூச்சி &nbsp;உள்ளிட்ட அனைவரும் கௌரவிக்கப்பட்டனர். தங்கள் நிலத்தை மீட்டெ டுத்துத் தந்த போராளிகளை வாழப்பூண்டி கிராம மக்கள் ஊர்வலமாக அழைத்து வந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழகம் முழு வதும் பழங்குடியின நிலங்களை ஆக்கிரமிப்ப ளர்களிடமிருந்து மீட்கும் இந்தப் போராட்டம் தொட ரும் என்ற முழக்கத்துடன் விழா நிறைவடைந்தது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.