குழாயை திறந்து தண்ணீர் அருந்திய யானை
8 Feb 2026, 3:55 pm
<p><strong>குழாயை திறந்து தண்ணீர் அருந்திய யானை</strong></p>
<p>உதகை, பிப்.8- தேவர்சோலை பகுதியில் யானை ஒன்று, குடிநீர் குழாயை திறந்து தண் ணீர் அருந்திய காட்சிகள் இணையத் தில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, தேவர்சோலை பகுதியில் புலிகள் மட்டு மின்றி, யானைகள் நடமாட்டமும் அதிக ரித்துள்ளது. வனத்தில் போதிய உணவு கிடைக்காத காரணத்தால், யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக் குள் நுழைகின்றன. இதனிடையே கோடைக்காலம் தொடங்கி விட்டதால், வனத்தில் உள்ள நீர் நிலைகள் வறண்டு வருகிறது. மேலும், பசுந்தீவன தட் டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் யானைகள் ஊருக்குள் அதிகளவு வர வாய்ப்புள்ளது. இந்நிலையில், வெள்ளி யன்று இரவு தேவர்சோலை அருகே உள்ள மாரக்கரை குடியிருப்பு பகுதி யில் யானை ஒன்று நுழைந்தது. அப் போது லீலா என்பவரது வீட்டு குழா யில் இருந்து தண்ணீர் வெளியேறும் சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீட்டு ஜன்னல்களை திறந்து வெளியே எட்டிப் பார்த்த போது, யானை தனது தும்பிக்கையால் குழாயை திறந்து, அதிலிருந்து வெளி யேறிய தண்ணீரை குடித்து தாகம் தணித்தது. இதைக்கண்ட பொதுமக்கள் சிறிது அச்சத்துடன் இருந்தாலும், குழாயில் தும்பிக்கையை வைத்து தண் ணீரை அருந்தும் காட்சியை கண்டு ரசித்தனர். பின்னர் தங்களது வீட்டுக் குள் இருந்தபடி செல்போன்களில் யானையின் செயல்பாடுகளை எந்த வித தொந்தரவும் இன்றி வீடியோவாக பதிவு செய்தனர். தாகம் தீரும் வரை யானை குழாயில் இருந்து வெளியே றிய தண்ணீரை அருந்திவிட்டு அங்கி ருந்து மெதுவாக நடந்து சென்றது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.</p>
<p> </p>
