தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

9 லட்சம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அறிவிப்பு

3 Jan 2026, 2:20 pm
9 லட்சம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அறிவிப்பு

9 லட்சம் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு சென்னை, ஜன. 3 - அரசு ஊழியர்கள் - ஆசிரியர் களுக்கான தமிழ்நாடு அரசின் உறுதி யளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வர வேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்  அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், அவர் குறிப்பிட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 20  ஆண்டிற்கும் மேலாக பழைய ஓய் வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டுமெனத் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பழைய  பென்ஷன் திட்டத்தின் பெரும்பகுதி அம்சங்களை நிறைவேற்றும் வகை யில்,   “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை” தமிழ்நாடு அரசு  அறிவித்துள்ளது. இதனை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு  மாநில செயற்குழு வரவேற்பதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக் கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுக் களையும் தெரிவித்துக் கொள்கிறது. நவீன தாராளமயச் சூழலில், சர்வதேச நிதி மூலதனத்தின் சூதாட் டத்திற்கு மக்களின் சேமிப்புகள் காவு  கொடுக்கப்படும் வேளையில், தொடர்ந்த போராட்டங்களின் வாயி லாக இம்முன்னேற்றம் ஈட்டப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்த வெற்றி யாகும். அடக்குமுறைகளை ஏவிய ஜெயலலிதா, பழனிசாமி அரசுகள் ஒன்றிய பாஜக அரசின் தொழிலா ளர் விரோத நடவடிக்கைகளில் ஒன்றாக, ஓய்வூதியம் சமூக, பொரு ளாதார கடப்பாடு என்கிற கோட்பாட் டின் மீதே பெரும் தாக்குதல் நடத்தப் பட்டு வந்தது. அதன் ஒரு பகுதியாக, பழைய பென்ஷன் திட்டம் கைவிடப் பட்டு, புதிய பென்ஷன் திட்டம், பிறகு ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் போன்றவை அறிவிக்கப்பட்டன. அரசு ஊழியர், ஆசிரியர் மத்தியில்  பெருத்த எதிர்ப்பை உருவாக்கிய ‘புதிய’ பென்ஷன் திட்டம், தமிழகத் தில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தான், கண்டனத்துக்குரிய விதத்தில் 9  மாதங்கள் முன் தேதியிட்டு அம லுக்கு வந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி, அரசு ஊழியர் ஆசிரியர்களின் நியா யமான கோரிக்கைகளை நிறை வேற்றாதது மட்டுமல்ல, போராடிய ஊழியர்கள் மீது மிகவும் கடுமை யான அடக்குமுறைகளைக் கட்ட விழ்த்து விட்டது. மு.க. ஸ்டாலின் அரசால் 9 லட்சம் குடும்பங்கள் மகிழ்ச்சி இந்நிலையில், ஒன்றிய பாஜக  அரசு தமிழகத்திற்கு உரிய நிதிப்பங் கீட்டை வழங்காமல் வஞ்சித்து வரு கின்ற போதிலும், அரசுக்கு கடும் நிதிச்சுமை உள்ள நிலையிலும் பயன் வரையறுக்கப்பட்ட, பணிக் கொடை, அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட “உறுதி அளிக் கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை”  தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள தானது, 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர் களின் குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்! தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை உடனே அம லாக்கக் கூடிய விதத்தில், அரசா ணையை வெளியிட வேண்டுமென வும், சாலைப் பணியாளர் பணி வரன் முறை, சத்துணவு ஊழியர், அங்கன் வாடி ஊழியர்  போன்ற அடித்தட்டு மக்களின் காலமுறை ஊதியம், ஓய்வூதிய உயர்வு கோரிக்கைகள், ஆசிரியர், கல்லூரி ஆசிரியர் உள்ளிட்ட பகுதியினரின் ஊதிய முரண் பாடுகளைக் களைதல் உள்ளிட்ட அரசு ஊழியர் - ஆசிரியர்களின் நிலுவையில் உள்ள கோரிக்கை களைப் படிப்படியாக நிறைவேற்றிட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

சத்துணவு - அங்கன்வாடி ஊழியர்க்கும் உறுதியளிப்பு ஓய்வூதியம், கிராஜூவிட்டி உயர்வு வழங்க வேண்டும்!

சிஐடியு வரவேற்பும் கோரிக்கையும் சென்னை, ஜன. 3 - தமிழ்நாடு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத் திற்கு, சிஐடியு வரவேற்பு தெரிவித்துள்ளது.  சிஐடியு மாநிலத் தலைவர் ஜி. சுகுமாறன், பொதுச்செயலாளர் எஸ். கண்ணன் ஆகியோர்  விடுத்துள்ள அறிக்கையில் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது: ஓய்வூதியக் கோரிக்கைக்காக அரசு  ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் அமைப்புகள்  காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பை  வெளியிட்டிருந்த நிலையில், புதிய ஓய்வூதி யத் திட்டம் மற்றும் அதில் பங்களிப்பு செய்யும்  அளவு ஆகியவற்றை மாற்றியமைத்து, தமிழ் நாடு அரசு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது.  இதில், ஊழியர்கள் ஓய்வு பெறும் கடைசி  மாதத்தின் ஊதியத்தில் சரி பாதி ஓய்வூதிய மாக வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது.  முன்னேற்றமான நடவடிக்கையை சிஐடியு வரவேற்கிறது! பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களைப் பொறுத்தவரை, அவர்களின் மறைவுக்குப் பிறகு, குடும்பத்தின ருக்கு தொடர்ந்து 60 சதவிகிதம் ஓய்வூதியம் வழங் கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. பஞ்சப் படியும் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என கூறி  உள்ளது. மாநில அரசின் இந்த முன்னேற்றத்திற் குரிய செய்தியை சிஐடியு வரவேற்கிறது. அதேநேரம் தமிழ்நாடு அரசு அறிவிக்கின்ற  நலத்திட்ட நடவடிக்கைகளை அமல்படுத்தக் கூடிய அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட திட்டப் பணியாளர்களுக்கு  ஓய்வூதியம் குறித்து எந்த ஒரு அறிவிப்பை யும் வெளியிடவில்லை. இது நியாயம் அல்ல. அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழி யர்களுக்கும் அவர்களின் ஊதியத்தில் சரி பாதியை ஓய்வூதியமாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்பதை சிஐடியு தமிழ்நாடு மாநி லக் குழு வலியுறுத்துகிறது. பங்கேற்பு ஓய்வூதி யம் பெறும் அரசு ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி 25 லட்சமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவும் வரவேற்க வேண்டிய ஒன்று தான்.  சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் மீதும் அக்கறை செலுத்துக! இந்தப் பின்னணியில் சத்துணவு ஊழியர் கள் - அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரூபாய்  ஒரு லட்சம் மட்டுமே கிராஜூவிட்டி வழங்கப்படக் கூடிய நிலை இருப்பதை கணக்கில் கொண்டு, அதையும் பரிசீலித்து குறைந்த பட்சம்  10 லட்சம் ரூபாயாக அறிவிக்க வேண்டும். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத் தின் மூலம், ஒரு ஆண்டுக்கு 11 ஆயிரம் கோடி  ரூபாய் கூடுதலாக செலவாகும் என்பதை வெளிப் படுத்தி இருக்கிற அரசு, நலத்திட்டங்களை அடிமட்ட மக்களிடம் கொண்டு செல்லுகிற தூதுவர்களாக இருக்கும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களுக்கான கிராஜு விட்டி விஷயத்தில் அக்கறை எடுத்து, அதனை  உயர்த்திட முன்வர வேண்டும் என்று சிஐடியு தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.