தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவில் நிலத்தை காலி செய்ய அம்ருதாஞ்சன் நிறுவனத்திற்கு மீண்டும் உத்தரவு

15 May 2026, 10:18 pm
கோவில் நிலத்தை காலி செய்ய  அம்ருதாஞ்சன் நிறுவனத்திற்கு மீண்டும் உத்தரவு

கோவில் நிலத்தை காலி செய்ய அம்ருதாஞ்சன் நிறுவனத்திற்கு மீண்டும் உத்தரவு

சென்னை, மே 15- சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில் கபா லீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான 14 கிரவுண்ட் நிலத்தை காலி செய்யு மாறு அம்ருதாஞ்சன் நிறு வனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதியான உத்தரவு பிறப் பித்துள்ளது.

1901 ஆம் ஆண்டு 99 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,400 வாடகையில் குத்தகை அளிக்கப்பட்ட இந்த நிலத்தில் வலி நிவாரண மருந்துகளை தயாரிக்கும் அம்ருதாஞ்சன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

குத்தகை காலம் 2001இல் முடிவடைந்ததால் இந்து சமய அறநிலையத் துறை 2021இல் வாடகையை மாதம் ரூ.3.3 லட்சமாக நிர்ணயித்து நிலத்தை காலி செய்யுமாறு கோரியது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி, நிறுவனத்தை வெளியேற்றவும் 2001 முத லான வாடகை பாக்கியை வசூலிக்கவும் உத்தர விட்டார்.

மேல்முறையீட்டி லும் தலைமை நீதிபதி அமர்வு அந்த உத்தரவை உறுதி செய்தது.

கடந்த 20 ஆண்டு களாக வழக்கு நிலுவை யில் இருந்தும் நிறுவனம் வாடகை பாக்கியை செலுத் தாமல் இழுத்தடித்துள்ளது என நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

மீண்டும் மறு ஆய்வு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி வெள்ளியன்று தள்ளுபடி செய்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.