தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமோனியா கசிவால் உயிரிழந்தோருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு பெற்றுத் தருக!

23 Jun 2026, 10:45 pm
அமோனியா கசிவால் உயிரிழந்தோருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு பெற்றுத் தருக!

அமோனியா கசிவால் உயிரிழந்தோருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு பெற்றுத் தருக!

தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

சென்னை, ஜூன் 23 - அமோனியா வாயுக் கசிவால் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பகுதியில் உள்ள கன்னிகைப்பேரில் செயல்பட்டு வரும் செயிண்ட் பால் கடல்சார் உணவு தொழிற் சாலையில் 200-க்கும் அதிகமான பெண் தொழி லாளர்கள் பணிபுரிகின்றனர். கடந்த 21.06.2026 அன்று காலை 10 மணியளவில் நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்ட அமோனியா வாயு, கசிந்த தன் காரணமாக, இரவு நேரப் பணி முடித்து ஓய்விலிருந்த 74 தொழிலாளர்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். 30-க்கும் அதிகமானோர் வெண்டி லேட்டர் உள்ளிட்ட பயன்பாடுகள் தேவைப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். மற்ற அனை வருமே பல்வேறு உபாதைகளுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்!

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும் பத்தினருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது ஆறுதலையும், அனுதாபத் தையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த விபத்து நிர்வாகத்தின் அலட்சியத் தால், தொழிற்சாலைகள் பாதுகாப்பு விதிகளை உரிய முறையில் பின்பற்றாத காரணத்தால் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் ஆய்வு, கடந்த 2025 டிசம்பருக்குப் பின் நடக்கவில்லை.

சட்ட மீறல்களை கண்டுகொள்ளவில்லை!

ஆலைக்குள் 18 வயதுக்கு கீழான பெண் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்ட தாக தெரிகிறது. தற்போது சிகிச்சை பெற்று வரு வோரிலும் வயது குறைவானவர்கள் உள்ள தாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் சட்ட விரோதமாகும். எனினும், சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்காக சம்மந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது தொழிற்சாலைகள் துறை நடவடிக்கை எது வும் எடுத்ததாகத் தெரியவில்லை. தொழிலாளர்கள் ஆலையிலேயே பாது காப்பற்ற நிலையில் தங்க வைக்கப்பட்டது, குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத் தப்பட்டது ஆகியவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளாலும் ஆய்வு செய்யப் பட்டு தடுக்கப்படவில்லை என்பது அதிகாரி களின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது.

தொழிலாளர்களின் விபரம் பதிவு செய்யப்படவில்லை!

மூன்றாவது, விபத்து நடந்த ஆலையில் மணிப்பூர், அசாம், ஒடிசா மாநிலங்களைச் சார்ந்த தொழிலாளர்கள் புலம்பெயர் தொழிலா ளர் சட்டத்தின்படி பதிவு செய்யப்படவில்லை. இதன் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்பது தனியார் நிறுவனங்களுக்கு கண்மூடித்தனமாக அளிக்கப்படும் ஆதரவு நடவடிக்கைகளாகத் தெரிகிறது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்தப் பின்னணியில், ஒன்றிய பாஜக அர சானது, தொழிற்சாலைகளை ஆய்வு செய்து சுய மாகவே சான்றளிக்கலாம் என புதிய சட்டத் தொகுப்பில் மேற்கொண்டுள்ள திருத்தம் உட னடியாக நீக்கப்பட வேண்டும் என்பதையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சுட்டிக் காட்டுகிறது.

பாதுகாப்பற்ற நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள்

மாநிலம் முழுவதும் வெளிமாநிலத் தொழி லாளர்கள் கடும் சுரண்டலுக்கும், குறைந்த ஊதி யம், பாதுகாப்பற்ற பணிச்சூழல், காலவரம் பின்றி போதுமான ஓய்வு வழங்காமல் வேலை வாங்கப்படுவது, சுகாதாரமற்ற இடங்களில் தங்க வைக்கப்படுவது போன்ற பலவிதமான சிரமங்களுக்கு மத்தியில் தான் பணிபுரிகின்ற னர். இவர்கள் அணிதிரட்டப்படாத தொழி லாளர்களாக இருப்பதால் கொத்தடிமை என்ற நிலைக்கு தாழ்ந்து போயுள்ளனர். இந்நிலையில், மாநில அரசு அறிவித்துள்ள ரூபாய் 2 லட்சம் இழப்பீடு என்பது மிகக் குறைவா னது. எனவே, இழப்பீட்டை அரசு உயர்த்தி அறி விக்க வேண்டும். நிறுவனத்தின் சட்ட மீறல் கார ணமாக மரணம் அடைந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு சட்டப்படியான இழப்பீடு ரூபாய் 25 லட்சம் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறு பவர்களுக்கு உயர் சிகிச்சை அளிப்பதுடன், காயமடைந்த அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

திருவள்ளூரில் சிபிஎம் நாளை ஆர்ப்பாட்டம் !

அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு, உயர் மருத்துவச் சிகிச்சையை உறுதிப்படுத்த வலியுறுத்தி வியாழக்கிழமை (25.06.2026) அன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.