அமோனியா விபத்து: நிறுவனத்தின் பிரதான கதவுக்கு சீல் வைப்பதில் இழுபறி
3 hours before
<p><strong>அமோனியா விபத்து: நிறுவனத்தின் பிரதான கதவுக்கு சீல் வைப்பதில் இழுபறி</strong></p><p>திருவள்ளூர்,ஜூலை 13- திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேரில் இயங்கி வந்த தனியார் கடல் உணவுப் பதப்படுத்தும் நிறுவனத்தில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் 18 தொழி லாளர்கள் உயிரிழந்த நிலை யில், அந்நிறுவனத்தின் பிரதான கதவுக்கு சீல் வைக்கும் பணியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் தாமதத்தால் இழுபறி நீடிக்கிறது. கடந்த மாதம் 21-ஆம் தேதி நிகழ்ந்த இந்த விபத்தைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் உரிமை யாளர்கள் மற்றும் மேலாளர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்ட கலெக்டர் கவிதா உத்தரவின் பேரில், கோட்டாட்சியர் ரவிச் சந்திரன் தலைமையில் கடந்த 8-ஆம் தேதி நிறு வனத்தின் அலுவலகம், குடோன் உள்ளிட்ட 5 பகுதிகள் சீல் வைக்கப் பட்டன. தொடர்ந்து கழிவுநீர் அகற்றும் பணி மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வளாகத்தில் இருந்த மரங்கள் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் பின்பக்க கதவுகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லும் வாயில்களுக்கு வருவாய்த் துறையினர் ஏற்கனவே சீல் வைத்துள்ளனர். இந்நிலையில், நிறு வனத்தின் பிரதான கதவு மற்றும் வாகன நிறுத்துமிட கதவுகளுக்கு சீல் வைப்ப தற்கும், மீதமுள்ள மின் இணைப்புகளை முழுமை யாகத் துண்டிப்பதற்கும் அதிகாரிகள் திட்டமிட்டனர். இருப்பினும், மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகளி டமிருந்து இதற்கான உரிய ஒப்புதல் கடிதம் கிடைக்காததால், அந்தப் பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் வருவாய்த்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நிறுவனத்திற்கு அருகே காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.</p>
