தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமோனியா வாயு கசிவுப் பயங்கரம் கொத்தடிமைகளாக்கப்பட்ட இளம்பெண்களின் மரண ஓலம்! - கே.பாலகிருஷ்ணன்

1 Jul 2026, 10:45 pm
அமோனியா வாயு கசிவுப் பயங்கரம் கொத்தடிமைகளாக்கப்பட்ட இளம்பெண்களின் மரண ஓலம்! - கே.பாலகிருஷ்ணன்

அமோனியா வாயு கசிவுப் பயங்கரம் கொத்தடிமைகளாக்கப்பட்ட இளம்பெண்களின் மரண ஓலம்! - கே.பாலகிருஷ்ணன்

திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப் பேர் கிராமத்தில் உள்ள புனித பீட்டர் பால் கடல் உணவு, இறால் பதப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலையில் கடந்த ஜூன் 21 அன்று காலையில் அந்த பயங்கர சம்பவம் நடந்தது.

அமோனியா வாயு தாக்கியதில் 80க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 70 பெண்கள் உட்பட 74 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தற்போது வரை 17 இளம் பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், மருத்துவ மனையில் உள்ளவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும் என உறுதிப்படுத்த முடியவில்லை. 25 பேர் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மரணத்துடன் போராடி வரு வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலை அமோனியா வாயுவைப் பயன் படுத்திக் குளிர்பதன கிடங்குகளில் கடல் உணவுக ளைப் பதப்படுத்தி, சேமித்து வைத்து ஏற்றுமதி செய்கிறது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் இளம்பெண்கள். அதுவும் ஒடிசா, அசாம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சார்ந்த பழங்குடியினப் பெண்கள்; முகவர்கள் மூலம் அழைத்து வரப்பட்டவர்கள். இவர்கள் குறைந்த கூலிக்குக் கொத்தடிமைகளைப் போல நடத்தப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தைச் சார்ந்த பெண்களும் இதே நிலையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார்கள். இந்த ஆலையை நடத்து கிறவர்கள் முந்தைய ஆட்சிகளில் இடம்பெற்ற அர சியல் செல்வாக்கு உள்ளவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தொழிலாளர் நலச் சட்டங்கள், புலம்பெயர் தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளிட்ட சட்டங்களோ, உயிருக்கு ஆபத்தான தொழிற் சாலைக்கு உண்டான குறைந்தபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளோ - எதுவும் இல்லாமல் கொள்ளை லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளது.

நள்ளிரவில் பரவிய நச்சு வாயு: தங்குமிடமே மரணக் குழியானது

கடந்த ஜூன் 21-ஆம் தேதி காலை திடீரென ஆலையில் அமோனியா வாயு செல்லும் குழாயில் (முறையாகப் பராமரிக்கப்படாததால்) கசிவு ஏற்பட்டுள்ளது. முந்தைய இரவு பணி முடித்து அங்கேயே உறங்கிக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் 70-க்கும் மேற்பட்டோர் இந்த அமோனியா வாயுவைச் சுவாசித்து மூச்சடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்து அவர்கள் எழுந்து ஓடித் தப்புவதற்குள் வாயுவின் பரவல் வேகம் அதிகரித்து, இப்பெண் தொழிலாளர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளனர். திக்குமுக்காடிய பெண் தொழிலாளர்களைப் பாது காப்பதற்காக ஆலைக்குள் வேலை செய்து கொண்டி ருந்த தொழிலாளர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்துப் பெண்களை வெளியேற்றியுள்ளனர். இந்தத் தொழிலாளர்களும் பலர் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பிறகு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு இவர்கள் மாற்றப்பட்டுத் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இவர்களது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இரவு-பகலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

குளிரூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் அமோனியா வாயு மிகவும் ஆபத்தானதாகும். உடலில் பட்ட மாத்திரத்தில் உடலில் உள்ள தண்ணீரை உறிஞ்சி எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டதாகும். பாதிக் கப்பட்ட பெண்கள் அமோனியா வாயுவைச் சுவாசித்து நுரையீரல் மிக மோசமாகப் பாதிக்கப் பட்டதுடன், முகம் மற்றும் உடலின் பகுதிகள் வெந்து போயுள்ளன. பலருக்கும் கண்கள் பாதிக்கப்பட் டுள்ளன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களின் கோரக் காட்சியைக் பார்க்கும் எவரும் அதிர்ச்சியில் உறைந்து விடுவர். இத்தகைய கொடு மையான இந்தத் தொழிற்சாலையில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை. மேலும், பணி முடித்த பெண்களை வெளி யில் தங்க வைக்க ஏற்பாடு செய்யாமல், கொத்தடிமை களைப் போலத் தொழிற்சாலைக்குள்ளேயே தங்க வைத்தது மோசமான சட்டவிரோதமாகும். வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ஆபத்தான அமோனியா வாயு செல்லும் குழாய்களுக்கு அருகி லேயே இப்பெண் தொழிலாளர்கள் தங்கும் அறை அமைந்துள்ளதுதான் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாகும்.

ஏற்கனவே சில நேரங்களில் வாயு கசிவு ஏற்பட்டுள்ள போதும் நிர்வாகம் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மேலும், ஆபத்துகள் நிறைந்த தொழிற்சாலைகளில் பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை. குறைந்தபட்சம் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டவுடன் ஒலிக்க வேண்டிய ஒலிப்பான் வேலை செய்யாதது மட்டுமல்ல; தேவையான முதலுதவி ஏற்பாடுகள் கூடத் தொழிற்சாலையில் இல்லை. இத்தகைய சட்டவிரோத அனைத்து நடவடிக்கை களுக்கும் அவர்களது அரசியல் செல்வாக்கும், அதிகாரிகளின் ஒத்துழைப்பும் முக்கியமான காரணமாகும்.

நிர்வாகத்தின் அலட்சியமும், மூடிமறைக்கப்பட்ட சிறுமிகளின் மரணங்களும்

இந்தக் கொடூர விபத்து நடந்து பத்து நாட்கள் கடந்த நிலையிலும், இன்னும் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளும், அவலங்களும் தொடர் கதையாக நீடிக்கின்றன. ஆலை நிர்வாகத்திடம் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் குறித்த முறையான எவ்விதத் தரவுகளும் இல்லை. இதனால் பாதிக்கப் பட்டவர்கள் யார், அவர்களின் சொந்த ஊர் எது என்பதை அடையாளம் காண்பதிலேயே அதிகாரிகள் திக்குமுக்காடிப் போயினர். விபத்து நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகே (ஜூன் 24) மருத்துவமனையில் இருந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேச முடிந்தது என்றால், அரசு இயந்திரத்தின் ஒருங்கி ணைப்பு எவ்வளவு மோசமாக இருந்துள்ளது என்ப தைப் புரிந்து கொள்ளலாம். பல குடும்பங்களுக்குத் தங்கள் பிள்ளைகளின் மரணச் செய்தி அதிகாரப்பூர்வ மாகத் தெரிவிக்கப்படாமல், சக தொழிலாளர்கள் போன் மூலம் சொன்ன பிறகே தெரியவந்துள்ளது. ஒடிசாவைச் சேர்ந்த இராஜமிகா ஜூவாங்கா என்ற தொழிலாளி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டே தனது சகோதரி கீதா ஜூவாங்காவின் நிலைமை குறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டும் எவ்விதப் பதிலும் இல்லை; இறுதியாகத் தனது சகோதரியின் உடல் சொந்த ஊருக்குச் சென்ற டைந்த பிறகே அவர் இறந்தது குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது.

இதைவிடக் கொடுமை, இந்த ஆலையில் சட்ட விரோதமாகச் சிறுமிகள் கொத்தடிமைகளாகப் பணிய மர்த்தப்பட்டுள்ளனர். உயிரிழந்த ஒடிசாவின் கேந்துஜார் மாவட்டத்தைச் சேர்ந்த குமானி ஜூவாங்கா என்ற சிறுமிக்கு வெறும் 15 வயதுதான் ஆகிறது. ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு, மாதம் 15,000 ரூபாய் சம்பளம் என்ற முகவர்க ளின் வார்த்தையை நம்பி சென்னைக்கு வந்த ஐந்து மாதங்களில் சடலமாகத் திரும்பியுள்ளார். “இதுவே அவளது முதல் வேலை, இதுவே அவளது இறுதி வேலையாகவும் முடிந்துவிட்டது” என்று அவளது சகோதரர் கதறுவது நம் நெஞ்சை உலுக்குகிறது. சுரேஷ் மற்றும் ஸ்ரீகாந்த் ஜூவாங்கா போன்ற ஒடிசா வைச் சேர்ந்த இடைத்தரகர்கள், போலி ஆதார் அட்டை களைத் தயாரித்துச் சிறுமிகளை இத்தகைய பேரா பத்தான ஆலைகளில் அடைத்து வைத்துள்ளனர். இந்தச் குழந்தை உழைப்புச் சுரண்டல் இவ்வளவு பெரிய உயிர்ப்பலிக்குப் பிறகே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆனால், இத்தகைய சட்டவிரோதச் செயல்க ளைத் தடுத்து நிறுத்த வேண்டிய தொழிலாளர் நலத்துறை, மாநிலம் முழுவதும் உள்ள பிற ஆலை களில் பணிபுரியும் சிறுமிகளைக் கண்டறிய உடன டிச் சிறப்பு ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளப் போவ தில்லை என்றும், தங்களின் ‘வழக்கமான ஆய்வுகள்’ (routine inspections) மட்டுமே தொடரும் என்றும் அலட்சியமாகப் பதிலளிப்பது வன்மையான கண்ட னத்திற்குரியது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்க ளுக்குத் தகுந்த உளவியல் ஆலோசனைகளோ அல்லது கவுன்சிலிங்கோ வழங்கக் கூட அரசு இன்னும் எவ்வித ஏற்பாடும் செய்யவில்லை.

விபத்தல்ல, திட்டமிட்ட படுகொலை: அதிகார வர்க்கத்தின் குற்றக் கூட்டு!

எனவே, நடந்தது விபத்து என்பதை விட இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட படுகொலை என்றே கருத வேண்டியுள்ளது. இதுவரையில் சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர்கள், மேலாளர் மற்றும் இடைத் தரகர் உட்பட நான்கு பேர் மட்டுமே கைது செய்யப் பட்டுள்ளனர். ஆனால், இந்த ஆலையைக் கண்கா ணிக்கத் தவறிய மற்றும் இத்தனை விதிமீறல்களு க்குத் துணை நின்ற தொழிலாளர் துறை சார்ந்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யாதது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை உடனே எடுத்திட வேண்டும்.

இச்சம்பவம் நடந்து தமிழகமே அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்த நிலையில், ஜூன் 22-ஆம் தேதி சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொடுக்கப் பட்டுள்ளது. இத்தீர்மானத்தின் அடிப்படையில் இத்தொழிற்சாலையில் பின்பற்றப்பட்ட விதிமீறல் கள், பாதுகாப்புக் குறைபாடுகள், தொழிலாளர்கள் நலச் சட்டங்கள் புறக்கணிப்பு உள்ளிட்ட பல விவரங்கள் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, பாதிக் கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும், சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு எதிர்கால உத்தரவாத பாதுகாப்பு ஏற்பாடும், சொந்த ஊர் திரும்புவதற்கான முறையான ரயில் பயண ஏற்பாடுகளும் அரசு முன்னின்று மேற்கொண்டிருக்க வேண்டும். மேலும், தமிழகம் முழுவதும் இத்தகைய ஆபத்தான தொழிற்சாலைகள் குறித்து உரிய கண்காணிப்பு ஏற்பாடுகளும் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், சபாநாயகர் அதிரடியாக இத்தகைய கோரச் சம்பவம் குறித்துச் சட்டமன்றத்தில் விவாதத்தை அனுமதிக்காமல், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மூலம் 110 விதியின் கீழ் அறிக்கை யைப் படித்து இப்பிரச்சினையை முடித்து வைத்த தானது மோசமான முன்னுதாரணமாகும். அதுமட்டு மின்றி, உயிரிழந்த இளம்பெண்களின் குடும்பங்க ளுக்கு அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் மட்டுமே அறிவித்ததும், ஆலை நிர்வாகத்தின் மூலம் நிலுவைச் சம்பளத்தை மட்டும் பெற்றுத் தந்துவிட்டுத் தன் கடமை முடிந்தது என நினைப்பதும் நியாயமற்ற தாகும். இதை ஏதோ சாதாரணமான சம்பவமாகக் கருத முடியவில்லை. மணிக்கணக்கில் சட்டமன்றத் தில் விவாதங்கள் நடத்திக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், பல இளம்பெண் தொழிலாளிகளின் உயிர் பறிப்புச் சம்பவம் முக்கியத்துவம் பெற வில்லையே என்ற கவலை ஏற்படுகிறது. அரசு கடைப்பிடித்து வரும் கார்ப்பரேட் முதலாளித்துவக் கொடூரச் சுரண்டல் கொள்கையின் வெளிப்பாடாகவே பார்க்க முடிகிறது.

கசக்கிப் பிழியப்படும் உழைப்பு: கேள்விக்குள்ளாகும் தமிழ்நாட்டுப் பண்பாடு

அண்டை மாநிலங்களில் வறுமையில் உழலும் ஏழைப் பழங்குடியினப் பெண்களை அழைத்து வந்து தொழிற்சாலைகளில் அடைத்து வைத்துச் சுரண்டு வது அனுதினமும் தொடர்கதையாகி வருகிறது. ஆட்சியாளர்கள் ஒவ்வொரு நாளும் தொழில் வளர்ச்சி பற்றி வானளாவப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதேசமயம் அத்தொழிற்சாலைகளில் ஈ, எறும்புகளைப் போலக் கசக்கிப் பிழியப்படும் தொழி லாளர்களைப் பற்றியும், அவர்கள் மீதான உழைப்புச் சுரண்டலைப் பற்றியும் கிஞ்சிற்றும் கவலைப்படுவ தில்லை. உயிரிழந்தவர்கள் அடுத்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் தமிழக அரசு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கித் தனது கடமையை முடித்துக் கொண்டது. இதே காரணத்தினாலோ என்ன வோ, ஒட்டுமொத்த தமிழகமும் இந்த உயிரிழப்பு கள் குறித்து அமைதியாகக் கடந்து செல்வது “பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும்” என்று போற்றிப் புகழ்ந்த தமிழ்நாட்டுப் பண்பாட்டிற்குப் பொருத்தமா னதா என்பதே கேள்வி. இச்சம்பவம் நடைபெற்றது முதல் தொடர்ச்சியாக மருத்துவமனை சென்று பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்ததுடன், அவர்க ளுக்கு உரிய சிகிச்சை கிடைத்திடவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைத்திடவும் தொடர்ந்து போராடி வருகிற இயக்கம் சிஐடியு மற்றும் சிபிஐ(எம்) என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவத்தில் நிர்வாகங்களின் கையாட்களா கச் செயல்பட்டுள்ள தொழிலாளர் நலத்துறை அதிகாரி கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். உயிரிழந்த பெண்களுக்குத் தலா குறைந்தபட்சம் ரூ. 25 லட்சம் அரசு மற்றும் தொழிற்சாலை நிர்வாகங்க ளின் மூலம் நிவாரணம் கிடைப்பதையும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களுக்கும் உரிய வாழ்வா தார நிவாரணத்தை உறுதி செய்திடவும் வேண்டும். தமிழக அரசு, தமிழகம் முழுவதும் உள்ள ஆபத்தான ரசாயனத் தொழிற்சாலைகளில் உரிய தொழிலாளர் நலச் சட்டங்கள் அமலாக்கம், பாதுகாப்பு ஏற்பாடு கள், புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டங்கள் அமலாவதை உறுதி செய்திட வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.