அமோனியா வாயு கசிவு விபத்தல்ல, கொலைக் குற்றம்! சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாரன் சாடல்
26 Jun 2026, 12:40 am
<p><strong>அமோனியா வாயு கசிவு விபத்தல்ல, கொலைக் குற்றம்! சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாரன் சாடல்</strong></p><p>திருவள்ளூர், ஜூன் 25- பெரியபாளையம் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோ னியா வாயு கசிந்து 10 தொழிலாளர்கள் உயி ரிழந்த சம்பவம் சாதாரண விபத்தல்ல, அது ஒரு கொலைக் குற்றத்திற்குச் சமம் என்று சிஐடியு மாநிலத் தலைவர் ஜி.சுகுமாரன் கடுமையாகக் சாடியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதி யில் உள்ள இறால் பதப்ப டுத்தும் தொழிற்சாலையில் கடந்த 21-ஆம் தேதி அமோனியா வாயு கசிந்ததில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 12 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், உரிய பாது காப்பு நடவடிக்கைகள் எடுக்காத தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது நட வடிக்கை எடுக்கக் கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் சிஐடியு சார்பில் கன்னிகைப்பேர் பஜாரில் புதனன்று ஆர்ப்பா ட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சிஐடியு மாநிலத் தலை வர் ஜி.சுகு மாரன், தொழிற் சாலைக்குள் பெண் தொழிலாளர்களை ஆடு, மாடுகளைப் போல் அடைத்து வைத்துச் சட்ட மீறல்களில் ஈடுபட்டுள்ள ஆலை நிர்வாகத்தையும், அதற்குத் துணைபோன தொழிலாளர் துறையையும் வன்மையாகக் கண்டித்தார். தொழிலாளர்கள் தங்கி யிருந்த அறையில் மட்டும் எப்படி வாயு கசிவு ஏற்பட்டது என்ற சந்தேகம் எழுவதா கவும் அவர் குறிப்பிட்டார். சென்னையில் ஹெல்மெட் போடாதவர்கள் மீது வழக்குப் போடும் காவல்துறை, கொலைக் குற்றம் செய்த முத லாளிகளைத் தப்பவிடுவது சட்டத்திற்குப் புறம்பானது என்றும், வாயிலில் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆய்வு நடத்திய அதிகாரிகள் மீதும், ஆலை முதலாளிகள் மீதும் உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், உயிரிழந்த தொழி லாளர்களின் குடும்பங்க ளுக்குத் தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்த ஆர்ப்பாட்ட த்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ஏ.ஜி.சந்தானம் தலைமை தாங்கி னார். இதில் சிஐடியு மாநில துணைத் தலை வர்கள் கே.விஜயன், ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட நிர்வாகிகள் என்.நித்தியானந்தம், எம்.சந்திர சேகரன், இ.வேலன், ஜெ.ரமேஷ், சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், ஏ.ஜி.கண்ணன், ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் என்.கங்கா தரன், மாவட்ட குழு உறுப்பி னர் ஏ.பத்மா மற்றும் மூத்த தோழர்கள் கே.செல்வ ராஜ், பி.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.</p>
