தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூல்

14 May 2026, 11:34 pm
அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூல்

அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூல்

ஈரோடு, மே 14- பவானியை அடுத்த அம்மாபேட் டையில் உள்ள சுங்கச்சாவடியை கடந்து செல்லும் வாகனங்களுக்கு வெள்ளியன்று (இன்று) நள்ளிரவு முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

85 கி.மீ. தொலைவுள்ள 7 மீட் டர் அகலம் கொண்ட ஈரோடு - பவானி - மேட்டூர் - தொப்பூர் இரு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை யாக அறிவிக்கப்பட்டு, 10 மீட்டர் அகலம் கொண்டதாக ரூ.242.40 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட் டது.

இப்பணிகள் கடந்தாண்டு நிறை வடைந்த நிலையில், வெள்ளாறு மற் றும் அம்மாப்பேட்டை என இரு இடங் களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப் பட்டு, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டது.

இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய தோடு, பவானி குமாரபாளையம் லாரி உரிமையாளர்கள் சங்கம், பவானி சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப் பணன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த னர்.

இவ்வழக்கில் அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூ லிக்க தடை விதித்த உயர்நீதிமன் றம், சென்னை ஐஐடி குழு சாலை யின் தரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவினை எதிர்த்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், உச்சநீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டில், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப் பட்டதோடு, கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து, கட்டணம் வசூ லிக்க சட்டபூர்வ நடவடிக்கைகளை தொடங்கிய இந்திய தேசிய நெடுஞ் சாலை ஆணையம், அம்மாபேட்டை சுங்கச்சாவடியில் கேமரா, பாஸ்ட் டாக் சென்சார் பொருத்துதல் உள் ளிட்ட பணிகளில் கடந்த ஒரு வார காலமாக ஈடுபட்டு வந்தது.

இந்நிலை யில், வெள்ளியன்று (மே 15 - இன்று) நள்ளிரவு முதல் அம்மாபேட்டை சுங் கச்சாவடியை கடந்து செல்லும் வாக னங்களுக்கு கட்டணம் வசூலிக்கப் படும் எனவும், கட்டண விவரங்களை யும் வெளியிட்டுள்ளது.

அம்மா பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங் கள் சென்று வர, தலா 3 வழித்தடங் கள் உள்ள நிலையில், இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள் ளிட்ட அவசர கால வாகனங்கள் செல்ல தனியே வழித்தடங்கள் இல்லை.

இச் சாலையை பயன்படுத்துவோருக்கு கழிப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்பட வில்லை.

இந்நிலையில், இருவழிச் சாலையாகவே உள்ள இச்சாலை யில், வாகனங்களுக்கு கட்டணம் வசூ லிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலி யுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.