ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் விரைவில் அம்மா உணவகம் சென்னை மாநகராட்சி திட்டம்
29 Sept 2026, 2:20 am

ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் விரைவில் அம்மா உணவகம்

சென்னை மாநகராட்சி திட்டம்

சென்னை, செப். 28-சென்னை ஓமந்தூரார் அரசுபன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கும் வகையில் புதிய‘அம்மா உணவகம்’ அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன்இருப்பவர்களுக்கு குறைந்த விலையில் உணவு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சார்பில்ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சருக்குக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் வெளிநோயாளர் (OP) நுழைவாயில் அருகில் உள்ள டவர்-7 பகுதி அம்மா உணவகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் இட்லி ரூ.1-க்கும்; பொங்கல், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம் ஆகியவை தலா ரூ.5-க்கும்; தயிர் சாதம் மற்றும் இரண்டு சப்பாத்தி தால் ஜோடிரூ.3-க்கும் விற்பனைசெய்யப்படவுள்ளது.இந்தத் திட்டத்திற்காகத் தேவையான கட்டடப் பணிகள் மற்றும் அரசுஅனுமதி கோரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 6 பேர் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.