மஞ்சள் காமாலை ஹாட்ஸ்பாட்டாக மாறும் அமிட்டி பல்கலைக்கழகம் புகார் கூறும் மாணவர்களை மிரட்டும் அதிகாரிகள்
14 May 2026, 8:47 pm
<p><strong>மஞ்சள் காமாலை ஹாட்ஸ்பாட்டாக மாறும் அமிட்டி பல்கலைக்கழகம் புகார் கூறும் மாணவர்களை மிரட்டும் அதிகாரிகள்</strong></p><p>மும்பை ஒரே ஊரில் 100 பேருக்கு மஞ்சள் காமாலை; அந்த ஊர் தொற்று நோய் மண்ட லமாக மாறியுள்ளது; மருத்துவக் கண்காணிப்பில் உள்ளது என செய்திகள் கேள்விப்பட்டிருப் போம். ஆனால் மாணவர்கள் பயிலும் ஒரு பல்கலைக்கழகமே மஞ்சள் காமாலை ஹாட்ஸ்பாட் டாக மாறியுள்ள சம்பவம் பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா வில் அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை யில் உள்ள அமிட்டி பல்கலைக் கழக வளாகத்தில் 2025 நவம்பர் முதல் அசுத்தமான உணவு, தண்ணீரால் 122 மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை, ஹெபடைடிஸ் ஏ (கல்லீரலைத் தாக்கும் ஒரு தீவிரமான வைரஸ் தொற்று) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார்கள் அளித்தும் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை என்றும், மாறாக குரல் கொடுப்பவர்களை மிரட்டுவதாக வும் மாணவர்கள் குற்றம்சாட்டி யுள்ளனர். பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர்கள் சிலர் ‘தி வயர்’ செய்தி நிறுவனத்திடம்,”விடுதி உணவு, தண்ணீர் குறித்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதற்காகத் தங்களையும் தங்கள் பெற்றோர்களையும் பல்க லைக்கழக நிர்வாகம் மிரட்டு கிறது. இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட மாணவர் ஒருவரை, அதை நீக்குமாறு அதிகாரிகள் மூலம் மிரட்டலுக்கு உள்ளாக்கி யுள்ளனர்” என கூறியுள்ளனர்.</p>
