தீக்கதிர் விரைவு செய்திகள்
12 Dec 2025, 3:12 pm

டிச.15-இல் அமித் ஷா தமிழகம் வருகை

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ள நிலை யில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா டிசம்பர் 15 ஆம் தேதி தமிழகம் வருகிறார். தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், அங்கிருந்து வேலூ ருக்குச் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார். கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து பாஜக மாநில நிர்வாகிகளுடன் ஆலோ சனை நடத்த உள்ள தாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடி நிதி ஒதுக்கீடு

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலை மையில், ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழ மையன்று நடை பெற்றது. இந்த கூட்டத்தில், மக்கள் தொகை கணக் கெடுப்பு பணிகளுக்காக ரூ. 11,718 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கி யுள்ளது. இதன்படி, 2027 மார்ச் 1 முதல் மக்கள் தொகை கணக் கெடுப்பு பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு உலகிலேயே மிகப்பெரிய நிர்வாக நடவடிக்கை என்றும், இந்த பணி களுக்காக நவீன தொழில் நுட்பங்களை பயன் படுத்த உள்ளதாகவும் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

டிச.18 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ கத்தில் டிசம்பர் 18 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு கள் காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக் கால் பகுதிகளிலும் லேசானது முதல் மித மான மழை பெய்யக் கூடும். டிசம்பர் 13, 14 ஆம் தேதிகளில் தமி ழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இரண்டு முதல் மூன்று டிகிரி செல் சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக் கூடும் என்றும் தெரி வித்துள்ளது.