முந்தய பக்கம்

உடைத்தவர்களுக்கு கட்சி? உள்துறை அமைச்சரின் சர்ச்சை முடிவு

20 Jun 2026, 9:36 pm
உடைத்தவர்களுக்கு கட்சி? உள்துறை அமைச்சரின் சர்ச்சை முடிவு
<p><strong>உடைத்தவர்களுக்கு கட்சி? உள்துறை அமைச்சரின் சர்ச்சை முடிவு</strong></p><p>ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஒரு சிவசேனா மட்டுமே உள்ளது. சிவசேனாவில் வேறு பிரிவு இல்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பி யுள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்ட முக மைகள் மூலமாகவும் பிற வகையிலும் மிரட்டி பல மாநிலங்களில் கட்சிகளை உடைத்து பாஜக ஆட்சி அமைத்துள் ளது. மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே மூலமாக சிவசேனா கட்சியை உடைத்தது. இதனால் சிவசேனா ஏக் நாத் ஷிண்டேபிரிவு, உத்தவ் பிரிவு என இரண்டு கட்சிகளாக இயங்கி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் கோலாபூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ்ஷா உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பிரிந்ததை அடுத்து, சிவசேனாவை நாம் ஏக்நாத் ஷிண்டேவின் பிரிவு என கூறி னோம். ஆனால், தற்போது பிரிவு என ஏதும் இல்லை. இருப்பது ஒரு சிவ சேனா மட்டுமே” என பேசியது அதிர்ச்சி யை கிளப்பியது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) கட்சியில் இருந்து 6 எம்பிக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் இணைய விருப்பம் தெரி வித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கடிதம் கொடுத்துள்ள நிலை யில், அமித் ஷாவின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram