தேர்தல் ஆணையம் மீதான குற்றச்சாட்டை திசைதிருப்ப பாகிஸ்தான் பற்றி பேசும் அமித் ஷா
25 Sept 2026, 10:56 pm

தேர்தல் ஆணையம் மீதான குற்றச்சாட்டை திசைதிருப்ப பாகிஸ்தான் பற்றி பேசும் அமித் ஷா

புதுதில்லிதேர்தல் ஆணையம், எஸ்.ஐ.ஆர். மற்றும் பாஜகவின் தொடர் வெற்றி தொடர்பான குற்றச்சாட்டுகளைத்திசைதிருப்பப் பாகிஸ்தான் பற்றிப் பேச ஆரம்பித்துள்ளார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா.உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சர்வதேச வணிக நிகழ்வில் அமித் ஷா பேசுகையில், “உள்நாட்டில்தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்குத் தூக்கமில்லாத இரவுகளைப் பரிசளித்துள்ளன. அதேபோல அமேதியில் தயாரிக்கப்படும் ஏகே-203 (AK-203) ரகத் துப்பாக்கிகள்,நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் என இரு தரப்பினருக்கும் தூக்கமில்லாத இரவுகளை உருவாக்கியுள்ளன.

மோசமான அல்லது காழ்ப்புணர்ச்சியான கண்ணோட்டம் கொண்டவர்களால் தான் இந்தியாவின் முன்னேற்றத்தைக் காண முடியவில்லை. ஜான்சி, சித்ரகூட், லக்னோ, ஆக்ரா, அலிகார் மற்றும் கான்பூர் ஆகியபாதுகாப்புத் தடத்தின் ஆறு மையங்களிலும் பாதுகாப்பு உபகரணங்களைத் தயாரிப்பதற்கான முதலீடுகள் குவிந்து வருகின்றன. இது உத்தரப்பிரதேசத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பாதுகாப்புத்துறை சார்ந்த தயாரிப்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது” என அவர் பேசினார்.