ஊழலைப் பற்றிப் பேச அமித் ஷாவிற்கு தகுதியில்லை: கே.பாலகிருஷ்ணன் சாடல்!
7 Jan 2026, 3:23 pm
<p><strong>ஊழலைப் பற்றிப் பேச அமித் ஷாவிற்கு தகுதியில்லை: கே.பாலகிருஷ்ணன் சாடல்!</strong></p>
<p>புதுச்சேரி, ஜன. 7- ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு என்ன தகுதி இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை நடத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் முறை கேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் செவ்வாய்க்கிழமை முற்று கைப் போராட்டம் நடை பெற்றது. இப்போராட் டத்திற்கு கட்சியின் புதுச் சேரி மாநிலக் குழு ஒருங்கி ணைப்பாளர் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்று கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன் உரையாற்றி னார். அவர் ஆற்றிய உரை விவரம் வருமாறு: ஊழல் புகாரும் முதல்வர் பொறுப்பும் “புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு, கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. போலி மருந்துகளைத் தயாரித்து பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் முறைகேடுகள் நடந்துள் ளன. இது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரி கள் உட்பட பலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளை மட்டும் கைது செய்துவிட்டு, ஆட்சி யில் இருப்பவர்கள் தப்பித் துக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். மருத்து வத்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் மாநில முதல்வர் ரங்கசாமிக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய அளவில் போலி மருந்து தயாரிப்பு நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு இந்த ஊழலுக்கு முழு மையாகப் பொறுப்பேற்றுப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.” மின்துறை டெண்டர் ரத்து சிபிஎம் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி “இந்த ஊழல் அரசு மின்சாரத்துறையைத் தனி யாருக்குத் தாரைவார்க்க முடிவு எடுத்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி மின்துறை ஊழியர்களுக்கு ஆதரவாகத் தொடர் போராட்டங்களை நடத்தி யது. அதன் விளைவாக, மின்சாரத்தைத் தனியாரு க்குத் தரும் டெண்டரை அரசு தற்போது ரத்து செய்துள் ளது. போராட்டத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனமான மின்துறையை மார்க்சிஸ்ட் கட்சி பாதுகாத்துள்ளது. ஒரு வேளை இந்தப் போராட்டம் நடத்தப்படாமல் இருந்திருந் தால், அதானி நிறுவனத் திற்கு மின்துறையின் பல ஆயிரம் கோடி ரூபாய்மதிப்பு ள்ள சொத்துக்கள் தாரை வார்க்கப்பட்டிருக்கும்.” அமித் ஷாவிற்கு கண்டனம் “சமீபத்தில் புதுக் கோட்டை மாவட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘ஊழல் எங்கே இருந்தாலும் அதனை ஒழிப்பதற்கு நாங்கள் தயங்கமாட்டோம்’ என்று ஆக்ரோஷமாக முழங் கினார். புதுக்கோட்டையில் ஊழலைப் பற்றிப் பேசும் அமித்ஷா, புதுச்சேரி யில் உள்ள பாஜக கூட்டணி அரசின் ஊழலைப் பற்றிப் பேச மறுப்பது ஏன்? பத்தா யிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழலில் மூழ்கியிருக்கும் பாஜக கூட்டணி அரசுக்குத் தலைமை தாங்கும் அமித் ஷாவுக்கு ஊழலைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக் கிறது?” என்று காரசார மாகக் கேள்வி எழுப்பினார். கைது நடவடிக்கை கட்சியின் புதுச்சேரி மாநில மூத்த தலைவர் முருகன் தொடங்கி வைத்துப் பேசினார். மாநிலச் செயலாளர் ராமச் சந்திரன், செயற்குழு உறுப்பி னர்கள் ராஜாங்கம், தமிழ்ச் செல்வன், கொளஞ்சி யப்பன், சீனுவாசன், கலிய மூர்த்தி, சத்தியா மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் கள், இடைக்கமிட்டி செயலா ளர்கள் அன்புமணி, ராம்ஜி, ஜோதிபாசு, ராமமூர்த்தி, சர வணன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக, காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் நேரு வீதி வழியாகச் சட்டப் பேரவை நோக்கி வந்தது. நேரு வீதி - கேன்டீன் வீதி சந்திப்பில் காவல்துறை யினர் இரும்பு வேலிகளை அமைத்துத் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.</p>
