தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமித்ஷாவின் ஊடுருவல் பூச்சாண்டி அசாம் மண்ணில் பிரிவினைவாத அரசியல்!

31 Mar 2026, 4:50 pm
அமித்ஷாவின் ஊடுருவல் பூச்சாண்டி  அசாம் மண்ணில் பிரிவினைவாத அரசியல்!
<p><strong>அமித்ஷாவின் ஊடுருவல் பூச்சாண்டி&nbsp; அசாம் மண்ணில் பிரிவினைவாத அரசியல்!&nbsp;</strong></p> <p>அசாம் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் பிரி வினைவாதக் கருத்துகளைத் தூவத் தொடங்கியுள்ளார். வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற வாழ்வா தாரப் பிரச்சனைகளைத் தீர்க்க வழியற்ற பா.ஜ.க அரசு, &lsquo;ஊடுருவல்&rsquo; மற்றும் &lsquo;மதவாத&rsquo; அட்டையைக் கை யில் எடுத்து மக்களைத் திசைதிருப்ப முயல்கிறது. &nbsp;நிர்வாகத் தோல்வியின் ஒப்புதல் வாக்குமூலம் &nbsp;கடந்த பத்தாண்டுகால &lsquo;இரட்டை &nbsp;இஞ்ஜின்&rsquo; ஆட்சியில் ஊடுருவல்காரர் களை வெளியேற்ற முடியாத பா.ஜ.க, இப்போது மீண்டும் ஐந்து &nbsp;ஆண்டுகள் அவகாசம் கேட்பது &nbsp;அவர்களின் நிர்வாகத் தோல்வியை யே காட்டுகிறது. உழைக்கும் எளிய இஸ்லாமிய மக்களை &lsquo;ஊடுருவல் காரர்கள்&rsquo; என முத்திரை குத்தி, அவர் களை இரண்டாம் தரக் குடிமக்களா க்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் நிகழ்ச்சி நிரலையே அமித் ஷா செயல்படுத்தத் துடிக்கிறார். &nbsp;சிறுபான்மையினரை ஒடுக்கும் ஆயுதம் பொது சிவில் சட்டம் மற்றும் &nbsp;வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் போன்ற அமித் ஷாவின் &nbsp;எச்சரிக்கைகள், சிறுபான்மை யினரை அரசியல் அதிகாரமற்ற வர்களாக்கும் மறைமுக இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மக்கள் தொகை அதிகரிப்பை &lsquo;பயம்&rsquo; போலக் காட்டுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. வெள்ளை அறிக்கை எங்கே? கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை &nbsp;பேர் சட்டப்பூர்வமாக வெளியேற்றப் பட்டனர் என்ற வெள்ளை அறிக்கை யை வெளியிட பா.ஜ.க அரசு அஞ்சு கிறது. நில மீட்பு என்ற பெயரில் வெளி யேற்றப்பட்ட ஏழை விவசாயிகளின் மறுவாழ்வு குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாதது ஏன்? இளைஞர் களுக்கு வேலை தர முடியாத தோல்வி யை மறைக்க, ஊடுருவல்காரர்கள் வேலை வாய்ப்பைப் பறிப்பதாகக் கூறுவது மிகப்பெரிய மோசடியாகும். வெறுப்பு அரசியலை அறுவடை செய்யும் பாசிச சக்திகளுக்கு எதிராக அசாம் மக்கள் திரள்வதே இன்றைய காலத்தின் கட்டாயம். - வி.கே.பாண்டியன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.