நாடாளுமன்றத்தைத் தவிர்த்தாலும் பொறுப்பிலிருந்து தப்ப முடியாது! - ச.வீரமணி
yesterday

நாடாளுமன்றத்தைத் தவிர்த்தாலும் பொறுப்பிலிருந்து தப்ப முடியாது! - ச.வீரமணி

மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் மக்களவையில் அமித் ஷா பங்கேற்காமல் இருந்தது மிகவும் விசித்திரமாக இருந்தது.

நாடாளுமன்ற வளாகத்திற்கு அவர் வந்திருந்தபோதிலும், திட்டமிட்டே ஆனால் வெளிப்படையாகவே அவையின் நடவடிக்கைகளிலிருந்து அவர் விலகியிருந்தார். நாடாளுமன்றத்தை நோக்கி ஜந்தர் மந்தரிலிருந்து பேரணி சென்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் பரவலான அருவருப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருந்தன. இதன் விளைவாக, உள்துறை அமைச்சரிடமிருந்து இதுகுறித்த தெளிவானவிளக்கத்தைக் கோரி எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைத்த வலியுறுத்தல் அவரை இக்கட்டான சூழலில்தள்ளியது.

ஜந்தர் மந்தர் போராட்டமும் காவல்துறை அத்துமீறலும்

சுயேச்சையான செய்தியாளர்களும் யூடியூபர்களும் தில்லி காவல்துறை மற்றும் அதிரடிப் படையினரின் கொடூரமான ஈவிரக்கமற்ற செயல்களைப் பதிவுசெய்திருந்தனர். கூர்முனைத் தடியடிகள் மற்றும் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதால், கிட்டத்தட்ட ஒரு டஜன் போராட்டக்காரர்கள் காயமடைந்தனர் என்பது உறுதியான மருத்துவ ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. தில்லி காவல்துறையும் உள்துறை அமைச்சகமும் ஆரம்பத்தில் இதை வன்மையாகமறுத்தபோதிலும், ‘இந்தப் போராட்டம் அமைதியானதல்ல’ என்று கூறுவதற்கு அவர்களால் எந்த ஆதாரத்தையும்திரட்ட முடியவில்லை. பெண் போராட்டக்காரர்களின் அந்தரங்க உறுப்புகளைக் குறிவைத்து லத்திகளைப்பயன்படுத்தியது காவல்துறையின் மற்றொரு கொடூரமான நடவடிக்கையாகும்.

மோதலின் போது, சீருடை அணிந்த பல காவலர்கள் தங்கள் பெயர் வில்லைகளை (name badges)அணியாமல் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. இத்தகைய ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது அவர்கள் தங்கள்அடையாளத்தை மறைக்க முயன்றது இதன் மூலம் வெளிப்பட்டது. காவலர்களின் பல நடவடிக்கைகள்உச்சநீதிமன்றத்தின் குறிப்பிட்ட உத்தரவுகளுக்கு முரணாக அமைந்திருந்தன. இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், போராட்ட அலையைத் திருப்பவோ அல்லது கட்டுப்படுத்தவோமுடியவில்லை என்பதே உண்மை.

சொல்லப்போனால், ஜந்தர் மந்தர் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் பரவலான மற்றும் மிகப்பெரிய அளவிலான போராட்டங்கள் வெடித்தன. இந்த நடவடிக்கைகள், அப்போதைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அரசாங்கத்தைத் தள்ளின. இயல்பாகவே, இது அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைப்பதில் எதிர்க்கட்சிகளுக்குப் புதியஉத்வேகத்தை அளித்தது. இங்குதான் அமித் ஷாவின்பங்கு முக்கியத்துவம் பெற்றது. பஹல்காம் விவகாரத்தில் நடந்தது போல, தனது நேரடிப் பொறுப்பிலிருந்து நழுவிச் செல்ல அவரை அனுமதிக்க எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை. தில்லி காவல்துறைவன்முறைக்குக் காரணமானவர்கள் யார் என்பது குறித்த தெளிவான மற்றும் நேரடியான பதிலையே அவர்கள்உறுதியாகக் கோரினரே தவிர, தெளிவற்ற அல்லது மேலோட்டமான விளக்கத்தை அவர்கள் ஏற்கவில்லை.பொறுப்பு யாருடையது என்பது மிகத் தெளிவாக இருந்தது; பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் எந்தவொரு முயற்சியும்சாத்தியமற்றதாக இருந்தது. எனவேதான், அமித் ஷா அந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.

அரசின் நெருக்கடியும் வலதுசாரி வெறியாட்டமும்

இதற்கிடையில் சூழலும் மனநிலையும் மாறிவிட்டதை ஒன்றிய அரசு உணரவில்லை. அச்சம் மறைந்து, கூட்டுத் துணிச்சல் வெளிப்படையாகத் தெரிந்தது. அரசுதனது கையறு நிலையை வெளிக்காட்டிக்கொள்ள முடியாவிட்டாலும், மோடி குறிப்பிட்ட ‘ஹோமியோபதி மருந்து’மற்றும் ‘திமாஜி நக்சல்கள்’ போன்றவற்றைப்பற்றிப் பேசுவதைத் தவிரஅதற்கு வேறு வழியில்லை. வன்முறையைத் தூண்டுவதில் உடந்தையாக இருந்ததற்கான தெளிவான சான்றாகவே இது அமைந்தது. மோடியின் சுதந்திரதின உரையில் ஒரு புதிய சிவில் தன்னார்வலர் படை உருவாக்கப்படுவது பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதுஹிட்லரின் ‘எஸ்.எஸ்.’ படையைப் போல இருக்குமா என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.

ஆனால், அரசாங்கத்தின் – குறிப்பாக அமித் ஷாவின் – அந்த அருவருப்பான செயல்திட்டத்தில், மேலும் வெளிச்சத்திற்கு வர வேண்டிய கொடூரமான அம்சங்கள் பல இருந்தன. சுதந்திர பரத்வாஜ் என்ற நபர் தனது சொந்த ஒப்புதல் வாக்குமூல ஒலிப்பேழையில் தனது ஆணவத்தையும், அழிக்க முடியாத ‘இந்துவீரன்’ பிம்பத்தையும் மீண்டும் நிலைநாட்ட முயன்றார்.

நிஷு ஆசாத் என்ற தலித் மற்றும் சிஜேபி ஆர்வலரான பதின்ம வயதுப் பெண், இன்ஸ்டாகிராமில் இந்துத்

துவா திட்டத்தின் செயல்பாடுகளை அம்பலப்படுத்தும் செய்திகளை வெளியிட்டு வந்தார். அவரது தந்தை மீதுசுதந்திர பரத்வாஜ் ஒரு கொலைவெறித் தாக்குதலை நடத்தியது தெளிவாகத் தெரிந்தது. சாகும் நிலையில் இருந்த அந்த மனிதருக்கு 60 தையல்கள் போடவேண்டிய சூழலை, தான் ஏற்படுத்தியதாக அவர் கேமராவின் முன் கூறினார். பின்னர், மிகவும் அலட்சியமான பாணியில், தன்மீது பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் 307ஆவது பிரிவின்கீழ் வன்முறையைத்தூண்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அவரே குறிப்பிட்டார்.

ஆனால், தான் கைதுகூட செய்யப்படவில்லை என்பதை நினைத்து அவர் சிரித்தார். பாஜகவின் சர்ச்சைக்குரிய அமைச்சரான கபில் மிஸ்ரா மற்றும் தில்லி பாஜகவின் உயர்மட்டங்களில் உள்ள அவரதுபிற தொடர்புகளின் ஆசியால்தான் இது சாத்தியமானது என்று அவர் உறுதியாகக் கூறினார். ‘முஸ்லிம்முக்த் பாரத்’ (முஸ்லிம்கள் இல்லாத இந்தியா) என்பதை உருவாக்குவதே தனது நோக்கம் என்று அவர் அந்தஒலிப்பேழையில். தனது கிரிமினல்தனமான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குத் தலித்துகளும் விதிவிலக்கல்ல என்பது இதிலிருந்து தெளிவாகிறது. இந்துத்துவாமற்றும் ஆர்எஸ்எஸ்/பாஜக கூட்டணிக்கு எதிராக இருப்பவர்களை – அதாவது ‘திமாகிநக்சல்களை’ – அறிவுஜீவி- நக்சல்களை- எதிர்கொள்ள, மேற்படி பரத்வாஜ் போன்ற ஒருவரைத் தங்கள் விருப்பமான நபராக அவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை அமித் ஷா மற்றும் நரேந்திர மோடியால் மறுக்க முடியாது. இத்தகைய போக்கு இந்தியஅரசமைப்புச்சட்டம் மற்றும் நாட்டிலுள்ள இதர சட்டங்களின்படியான ஆட்சிக்கு முற்றிலும் முரணானவைகளாகும்.

காவல்துறையின் குற்றமயமாக்கலும் வீழ்ச்சியும்

அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் தில்லி காவல்துறை

முற்றிலும் குற்றமயமாக்கப்பட்டு, ஓர் ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜந்தர் மந்தர் போராட்டத்தின்போது நடந்ததைப் போலவே, குறிப்பிட்ட சில பணிகளைச் செய்வதற்காகச் சுதந்திர பரத்வாஜ் மற்றும் அவரைப் போன்றவர்களுக்குத் தில்லி காவல்துறையின் பூட்ஸ் கால்களும் தடிகளும் வழங்கப்பட்டுள்ளன. ஊடகச் செய்திகள் இந்த நிகழ்வுப் போக்கை மேலும் உறுதிப்படுத்துகின்றன. சிறையில் இருக்க வேண்டிய சுமார் 300 முதல் 350 வரையிலான மோசமான கிரிமினல்கள், ஜூலை 20 அன்று தில்லி காவல்துறையின் கண்காணிப்பு கேமராக்களில் சிக்கினர். காவல்துறையினரே அவர்களைச்சிறையிலிருந்து தற்காலிகமாக விடுவித்து, போராட்டக்காரர்கள் மீது ஏவிவிடாமல் இது சாத்தியமாகியிருக்காது. இத்தகைய அருவருப்பான நிகழ்வுகள், யூடியூபர்களின் தனிப்பட்ட பதிவுகள் மற்றும் போராட்டக்காரர்களின் இன்ஸ்டாகிராம் பதிவேற்றங்கள் மூலம் முழுமையாகத் தெரியவராத பல விஷயங்களை ஒன்றிணைத்து,ஒரு முழுமையான சித்திரத்தைத் தெளிவுபடுத்துகின்றன.

இவ்வாறாக, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள சீருடை அணிந்ததில்லி காவல்துறை மூலம், எந்தவொரு எதிர்க்கருத்தையும் நியாயமான போராட்டத்தையும் ஒடுக்குவதற்குப் பாசிச முறைகள் கையாளப்பட்டுள்ளன. இதுஅரசமைப்புச் சட்டத்தைச் சார்ந்த நடைமுறைகள், அமைப்புகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின்வீழ்ச்சியை மட்டுமல்லாமல், இந்துத்துவாவின் வீழ்ச்சியையும்கூட குறிப்பதாக அமைந்துள்ளன. இந்துத்துவாசக்திகளும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் பெரும்பாலும் தங்களுக்குரியதாகக் காட்டிக்கொள்ள முயலும் அந்த ‘உயர்ந்ததார்மீக நிலைப்பாடு’ என்பது முற்றிலும் போலியானது. ‘வலிமைமிக்க தலைவர்’ என்று கூறப்படும் அமித் ஷா, கண்ணாடியில் தனது சொந்தமுகத்தைப் பார்க்கவே தயங்குகிறார் என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது.