தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

15 Mar 2026, 4:11 pm
விளையாட்டு

பாகிஸ்தான், வங்கதேசத்தை மறைமுகமாக குறிப்பிட்டு அமித் ஷா மகன் ஜெய் ஷா சர்ச்சை பேச்சு

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மகன் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி)  தலைவராக உள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஜெய் ஷா பேசுகை யில், “எந்தவொரு தனிப்பட்ட அணி யும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்தை விடப் பெரியது அல்ல. ஒரு அமைப்பு என்பது அனைத்து அணிகளின் கூட்ட மைப்பு தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட அணி இல்லையென்றால் அமைப்பு இயங்காது என்பது தவறு” என பாகிஸ் தான், வங்கதேச அணிகளை மறைமுக மாக குறிப்பிட்டு, விமர்சனம் செய்தார்.  உலகக்கோப்பையில் பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவுக்கு பயணம் செய்ய வங்கதேசம் மறுத்த தால், அந்த அணி தொடரிலிருந்து வெளி யேற்றப்பட்டு, அதற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.வங்கதேசத்திற்கு ஆதரவாகப் பாகிஸ்தான் அணியும் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக மிரட்டியது. பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டது. இதனை குறிப்பிட்டே ஒரு குறிப்பிட்ட அணி இல்லையென்றால் அமைப்பு இயங்காது என்பது தவறு ஜெய் ஷா  சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.  முன்னதாக,”டி-20 உலகக்கோ ப்பை தொடரில் முன்னெப்போதும் இல் லாத வகையில் 72 லட்சம் (7.2 மில்லி யன்) நேரலை பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது” என ஜெய் ஷா பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது.

மேற்கு ஆசிய போர் : பஹ்ரைன், சவூதி அரேபியா ‘பார்முலா ஒன்’ ரத்து

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் மற்றும் தாக்குதல்கள் காரணமாக, பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறவிருந்த ‘பார்முலா 1’ கார் பந்தயங்கள் ரத்து  செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத னால் 2026ஆம் ஆண்டுக்கான மொத்த பந்தயங்களின் எண்ணிக்கை 22 ஆகக் குறைந்துள்ளது. ஏப்ரல் 10 முதல் 12ஆம் தேதிகளில் பஹ்ரைனிலும், ஏப்ரல் 17 முதல் 19ஆம் தேதிகளில் சவூதி அரேபியா வின் ஜெத்தாவிலும் நடைபெறவிருந்த ‘பார்முலா 1’ கார் பந்தய போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க - இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் நடத்திய தாக்குதல்கள் வளை குடா நாடுகளைப் பாதித்துள்ளதால், பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரத்து செய்யப்பட்ட இந்த இரண்டு போட்டி களுக்குப் பதிலாக வேறு எந்த  இடத்திலும் பந்தயங்கள் நடத்தப் படாது என்று ‘பார்முலா ஒன்’ நிர்வாகம் கூறியுள்ளது. 5 வார இடைவெளி பஹ்ரைன், சவூதி அரேபியா ‘பார்முலா ஒன்’ ரத்து நடவடிக்கை யினால், மார்ச் 27 முதல் 29ஆம் தேதி களில் நடைபெறும் ஜப்பான் கிராண்ட்  பிரீ முடிவடைந்த பிறகு, அடுத்த போட்டியான மியாமி கிராண்ட் பிரீ  (மே 1-3) தொடங்குவதற்கு இடையில் ஐந்து வார கால இடைவெளி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வழியாக சஞ்சு சாம்சனை பாராட்டிய கம்பீர்

சமீபத்தில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அதிரடி தொடக்க வீரரும், விக்கெட் கீப்பருமான சஞ்சு சாம்சனை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பாராட்டாமல் புறக்கணித்து வந்தார். குறிப்பாக மறைமுகமாக விமர்சித்தும் வந்தார். இதற்கான காரணம் குறித்து தெளிவாக தெரியவில்லை. நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்தன. இந்நிலையில், கடும் எதிர்ப்பால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கேரளத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சனை பாராட்டியுளார். தில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில்,”சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடினால் முதல் 6 ஓவர்களிலேயே போட்டியை வென்று கொடுத்து விடுவார். அதாவது தனது முழுத் திறனுடன் அதிரடியாக விளையாடும்போது, பவர்பிளே ஓவர்களிலேயே எதிரணியிடமிருந்து வெற்றியைப் பறிக்கும் ஆற்றல் கொண்டவர்” என அவர் பாராட்டினார். சஞ்சு சாம்சனை கம்பீர் பாராட்டியதை தமிழ்நாடு மற்றும் கேரள ரசிகர்கள்,”அந்த பயம் இருக்கணும்” என மீம்ஸ் மூலம் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.