மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சென்னையில் முதலீட்டு விழிப்புணர்வு
24 Jul 2026, 12:00 am
<p><strong>மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சென்னையில் முதலீட்டு விழிப்புணர்வு</strong> </p><p>சென்னை, ஜூலை 23- இந்திய பரஸ்பர நிதி அமைப்பான ஏம்எப்ஐ, மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களிடையே நிதி அறிவு மற்றும் முதலீட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த ‘சக்ஷம்’ என்ற புதிய முன்னோடித் திட்டத்தைச் சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் தொடக்க விழாவில், தமிழ்நாடு அரசு ஊரக மாற்றுத் திட்டத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி வி.ஆர். சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வெறும் சேமிப்போடு நின்றுவிடாமல், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ‘சிப்’ முறைகள் மூலம் முறையான முதலீடுகளுக்கு மாற வழிகாட்டுவதே இதன் நோக்கமாகும். இதற்காக கேஒய்சி நடைமுறைகளை முடிப்பதற்கான நேரடி கள உதவிகளும், பயிற்சி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சேமிப்பைத் தாண்டி பெண்களுக்கு நீண்டகால நிதிப் பாதுகாப்பையும், பொருளாதார சுதந்திரத்தையும் அளிக்கும் முக்கிய மைல்கல்லாக இத்திட்டம் இருக்கும் என ஏஎம்எப்ஐ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி வெங்கட் என். சலாசனி தெரிவித்துள்ளார்</p>
