தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெனிசுலாவின் எதிர்காலத்தை அந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு

7 Jan 2026, 3:23 pm
வெனிசுலாவின் எதிர்காலத்தை அந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு
<p><strong>வெனிசுலாவின் எதிர்காலத்தை அந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு</strong></p> <p>வாஷிங்டன்,ஜன.7- வெனிசுலாவின் எதிர்காலத்தை அந்நாட்டு மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என அமெரிக்கர்கள் தெரி வித்துள்ளனர். &nbsp;வெனிசுலா ஜனாதிபதி நிக்கோ லஸ் மதுரோ அமெரிக்க ராணு வத்தால் கடத்தப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டை நிர்வகிக்கவும் அங்குள்ள கச்சா எண்ணெய் வளங்களை திருடு வதற்கும் டிரம்ப் திட்டமிட்ட நகர்வு களை செய்து &nbsp;வருகிறார். &nbsp;இந்நிலையில் டிரம்ப்பின் செயல்பாடுகள் குறித்து &lsquo;வாஷிங்டன் போஸ்ட்&rsquo; நடத்திய ஆய்வில் சில முக்கிய தகவல்கள் தெரிய வந்துள்ளன. அமெரிக்காவின் மேலாதிக்கம் பற்றிய கேள்விகளுக்கு &nbsp;அமெரிக்க மக்களிடையே எப்போதுமே ஆத ரவாக மற்றும் எதிராக என இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 2026-ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு வெளிநாட்டுப் பிரச்சனைகளில் தலை யிடுவதை விட, உள்நாட்டுப் பிரச்சனை களான சுகாதாரம், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, வீட்டு &nbsp;வாடகை கட்டுப்பாடு ஆகியவற்றி லேயே அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் விரும்புகின்றனர். மேலும் வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை கடத்துவதற்காக ராணுவத்தை அனுப்பியதை 10 இல் 4 அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். அதே அளவிலான மக்கள் ஆதரிக்கின்றனர். மீதமுள்ள 20 சத வீதம் பேர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளனர். வெனிசுலா நாட்டின் கட்டுப் பாட்டை அமெரிக்கா எடுத்துக் கொண்டு அங்கு ஒரு புதிய அரசாங்க த்தை அமைக்கும் என்ற கருத்தை 45 சதவிகித அமெரிக்கர்கள் &nbsp;எதிர்த்துள்ளனர். குறிப்பாக, 10 இல் 9 அமெரிக்கர்கள் வெனிசுலாவின் தலைவரை அந்த நாட்டு மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தெளி வாகக் கூறியுள்ளனர். டிரம்ப்பின் இந்த பயங்கரவாத நடவடிக்கைக்கு குடியரசுக் கட்சியினர் &nbsp;பரவலாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அவர்களில் பலரும் அமெரிக்கா மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் அதிகம் தலையிடுவதை விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக டிரம்ப் நிர்வாகம் பிரச்சாரம் செய்து வரு கிறது. ஆனால், அமெரிக்கப் பொது மக்களைப் பொறுத்தவரை போதைப் பொருள் கடத்தல் என்பது ஒரு பெரிய பிரச்சனையாகவே தெரியவில்லை. குடியரசுக் கட்சியினரில் 10 இல் ஒருவர் மட்டுமே இந்த போதைப்பொருள் &nbsp;பற்றி கவலைப்படுகின்றனர். மற்ற வர்கள் தங்கள் அன்றாட வாழ்வா தாரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ள பொருளாதாரச் சிக்கல்களுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர் &nbsp;என வாஷிங்டன் போஸ்ட் ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது. &nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.