தீக்கதிர் உலக செய்திகள்
12 Dec 2025, 2:40 pm

தென்கொரியாவிற்குள் போதைப் பொருள் கடத்தும் அமெரிக்கர்கள்

தென்கொரியாவில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் உள்ள வீரர்களுக்கு அமெரிக்கர் ஒருவர் போதைப்பொருட்களை ரகசியமாக கடத்தியுள்ளார். இது தொடர்பாக 2021 இல் அவர் கைது செய்யப்பட்டு விசா ரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அந்த அமெரிக்க ருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்கொ ரிய நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. மெத்தாம்பெட்டமைன், கொக்கைன் உள்ளிட்ட போ தைப் பொருட்களை அமெரிக்க அஞ்சல் துறை சேவை யின் மூலமாகஇவர்கள் கடத்தியது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் திருட்டை ஒப்புக்கொண்ட அமெரிக்கா

டிசம்பர் 10 புதன்கிழமையன்று வெனிசுலா கடற்க ரைக்கு அருகே அமெரிக்க ராணுவம் ஒரு மிகப் பெரிய எண்ணெய்க் கப்பலை கடத்தியது. தற்போது அந்தக் கப்பலில் இருந்த எண்ணெய்யை அமெரிக்காவே எடுத்துக் கொள்ளும் என வெள்ளை மாளிகை பத்திரிகைச் செய லாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். இதன்மூலமாக அமெரிக்கக் கப்பலின் எண்ணெய்யை திருடும் என்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் வரும் வாரத்தில் அப்பகுதியில் மேலும் பல எண்ணெய்க்கப்பல்களை அமெரிக்கா திருடும் என எச்சரிக்கை எழுந்துள்ளது.

வாழ்வாதாரத்தை அழிக்கும் பாக். அரசு : ரிக்‌ஷா ஓட்டுநர்கள் போராட்டம்

லாகூர்,டிச.12- டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசுக்கு எதிராக ரிக்‌ஷா ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். பஞ்சாப் அரசு ‘சிங்சி’ (Chingchi) ரிக்‌ஷாக்களை நவம்பர் மாதம் தடை செய்தது. இது ஒடுக்குமுறை கொள்கை என அதனைக் கண்டித்து ரிக்‌ஷா ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தை பஞ்சாப் ரிக்‌ஷா யூனியன், மஸ்தூர் கிசான் கட்சி ஆகியவை கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. சிங்சி ரிக்‌ஷாக்கள் பாகிஸ்தானின் பல பகுதிக ளில் மலிவான மற்றும் எளிதில் கிடைக்கும் பொதுப் போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும், மாற்றியமைக்கப் பட்ட மோட்டார் சைக்கிள்கள் ஆகும். போதிய அளவிலான மலிவு விலை அடிப்படையிலான பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில், ஏழை மக்கள் பல ஆண்டுகளாகச் சிங்சி ரிக்‌ஷாக்களை நம்பியே வேலைக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ரிக்சா ஓட்டுபவர்களுக்கு எந்த ஒரு மாற்று திட்டத்தையும் அறிவிக்காமல் வாழ்வாதாரப் பாதுகாப்பையும் உறுதி செய்யாமல் விதித்த தடையானது பொது மக்கள் மற்றும் ரிக்சா ஓட்டுபவர்களிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. லாகூர் நகரம் சமீபத்திய ஆண்டுகளில் உலகில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக மீண்டும் மீண்டும் இடம் பெற்று வருகிறது. குறிப்பாக குளிர்காலத்தில், தொழில் நிறுவனங்கள் மற்றும் வாகனப் புகையால் இந்நகரின் காற்று மாசு மக்களுக்கு ஆபத்து மிகுந்ததாக மாறுகிறது. பஞ்சாப் ரிக்‌ஷா யூனியன், மஸ்தூர் கிசான் கட்சியின் தலைவர் இர்ஃபான் அலி போராட்டத்தில் பேசிய போது, இந்த வகை ரிக்சாக்களில் குறைந்த விலையில் பயணம் மேற்கொள்ள முடிவதால் குறைந்த ஊதியம் மட்டுமே பெறும் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பொரு ளாதார நிலைக்கு பொருத்தமானதாக இருக்கின்றன. மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் சட்டங்களை அமலாக்கும் நடவடிக்கையானது உணர்ச்சியற்றது. அது மட்டுமல்ல ஜனநாயக விரோதமானது என விமர்சித்தார். குறிப்பாக சிங்சி ரிக்‌ஷா ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்க ளை தாங்களே பணம் செலவு செய்து வடிவமைத்துள்ள நிலையில், தடையை தொடர்ந்து அரசு அவற்றைப் பறி முதல் செய்தாலோ அல்லது அதிக அபராதம் விதித்தாலோ எந்த ஒரு மாற்று வழியும் இன்றி ஒரே இரவில் அந்த ஓட்டுநர்கள் வேலையில்லாமல் போவார்கள். அவர்களின் குடும்பப் பொருளாதாரம் முற்றிலும் நசுங்கி விடும். இது பொதுப் பாதுகாப்பு, காற்று மாசுபாட்டைக் காரணம் காட்டி, ஏழை ஓட்டுநர்களிடம் இருந்து அதிக பணத்தை அபராதம் என்ற பெயரில் பறிக்க அரசு செய்யும் முயற்சி எனவும் அலி குற்றம் சாட்டினார். சிங்சி ரிக்‌ஷாக்களை உண்மையிலேயே நிறுத்த விரும்பினால், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், மக்க ளுக்குப் பாதுகாப்பை வழங்கவும் அரசாங்கம் அந்த ஓட்டு நர்கள் மற்றும் பயணிகளுக்கு மாற்று வசதிகளை செய்து தர வேண்டும். அதேபோல பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மலிவு விலையில் மின்சார ரிக்‌ஷாக்களை வாங்குவதற்கு அரசு உதவ வேண்டும் என்றும் போராட்டத்தின் போது கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.