தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விவசாயிகளை மிரட்டும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்

17 Dec 2025, 4:11 pm
விவசாயிகளை மிரட்டும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்
<p><strong>விவசாயிகளை மிரட்டும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல்</strong></p> <p>உடுமலை, டிச.17- உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் மக் காச்சோள பயிர்கள் அமெரிக்கன் படைப்புழு தாக்குதளுக்கு உள்ளாகியுள்ளது.வேளாண் &nbsp;துறை அதிகாரிகள் சொல்லும் அனைத்து வழி முறைகளை செய்தும் இதை கட்டுப்படுத்த &nbsp;முடியாமல் திணறுவதாக விவசாயிகள் &nbsp;வேதனையுடன் தெரிவிக்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் பருவமழை நல்ல &nbsp;முறையில் பெய்த நிலையில், மாவட்டம் முழு வதும் நிலத்தடி நீர் குறிப்பிட்ட அளவு உயர்ந் துள்ளது. இதை பயன்படுத்தி விவசாயிகள் மக்காச்சோளம் மற்றும் காய்கறிகளை பயி ரிட்டுள்ளனர். இதில் உடுமலை, மடத்துக்கு ளம், குடிமங்கலம், தாராபுரம், குண்டடம் மற் றும் பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் பல் லாயிரகணக்கான ஏக்கருக்கு மேல் மக்காச் சோளம் விவசாயம் செய்து உள்ளனர். இந்நி லையில், விளை நிலங்களில் விதை முளைப் புக்கும் வரும் போதே, இலைகளில் பூழு &nbsp;தாக்குதலால் போதிய வளர்ச்சி இல்லாமல் உள்ளன. இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கை யில், இந்த ஆண்டு போதிய பருவ மழை பெய் ததால் ஏற்பட்ட மகிழ்ச்சி நீடிக்காத வகையில், &nbsp;மக்காச்சோளம் பயிரிகள் படைப்புழு தாக்கு தலுக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, இது &nbsp;அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் என்றும், இதை கட்டுப்படுத்த பயிர் &nbsp;குருத்தில் மருந்து அடிக்க வேண்டும் என்ற னர். மேலும் அடுத்த கட்டமாக ஏக்கர் ஒன் றுக்கு பத்து டேக் அளவில் டேக் ஒன்றுக்கு 100 &nbsp;மில்லி மருந்து வீதம் அடிக்க வேண்டும் என்ற னர். இதை எல்லாம் செய்த பின்னரும் நோய் &nbsp;தாக்குதல் குறையாமல் உள்ளது. ஏற்கனவே &nbsp;மக்காச்சோளம் பயிர் செய்ய ஏக்கர் ஒன்றுக்கு &nbsp;30 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்த நிலை யில், படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஏக்கர் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு &nbsp;செய்தும், விளை பயிர்கள் எல்லாம் வீணாகி &nbsp;விட்டது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு சரியான நிவாரணம் வழங்க வேண்டும் &nbsp;என்றனர். படைப்புழு தாக்குதல் குறித்து வேளாண் &nbsp;துறை அதிகாரிகள் கூறுகையில், படைப் புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிக ளுக்கு தொடர்ந்து மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் &nbsp;பாதிக்கப்பட்ட விவசா யிகளுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், அனைத்து &nbsp;விவசாயிகளும் அரசு அறிவித்த படி பயிர் &nbsp;காப்பீடு செய்ய வேண்டும் என தெரிவித்த னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.