முந்தய பக்கம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது

17 May 2026, 11:57 pm
சிறுமிக்கு  பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது
<p><strong>சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் ஒருவர் கைது</strong></p><p> ஆம்பூர்,மே 17- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் சிறுமிக்குத் தன் கைப்பேசியில் ஆபாசப் படம் காட்டித் தொல்லை கொடுத்த நபரை ஆம்பூர் நகர காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆம்பூர் மளிகைத் தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் அக்பர். இவர் வசிக்கும் பகுதியில் நடனப் பயிற்சி பெறுவத ற்காகச் சிறுமி ஒருவர் வந்து சென்றுள்ளார். இந்நிலையில், வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த அக்பர், அந்தச் சிறுமியை அழைத்துத் தனது கைப்பேசியில் ஆபாசப் படங்களைக் காட்டியுள்ளார். அதோடு நிறுத்தாமல், அந்தச் சிறுமியைத் தனது வீட்டிற்குள்ளும் வருமாறு வற்புறுத்தி அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தச் சிறுமி, நடந்த சம்பவங்கள் குறித்துத் தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு ஆத்திர மடைந்த சிறுமியின் பெற்றோர்கள், உடனடியாக ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் அக்பர் மீது முறைப்படி புகார் அளித்த னர். பெற்றோர்களின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், அக்பரை உடனடியாகக் கைது செய்தனர். அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் வேலூர் மத்திய சிறை யில் அடைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram