அம்பேத்கர் பயிற்சி மையத்தில் பயின்றவருக்கு கருவூலத் துறையில் வேலை நியமனம்
13 Dec 2025, 5:13 pm
<p><strong>அம்பேத்கர் பயிற்சி மையத்தில் பயின்றவருக்கு கருவூலத் துறையில் வேலை நியமனம்</strong></p>
<p>திருப்பூர், டிச. 13 - தாராபுரம் அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சி மையத் தில் பயின்ற சுந்தர் வடிவேல் (வயது 30) என்பவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி 4 தேர் வில் வெற்றி பெற்று கருவூலத் துறையில் இளநிலை உதவி யாளராக பணி நியமனம் பெற்றிருக்கிறார். தாராபுரம் நகராட்சி 19 ஆவது வார்டு தேவேந்திரா தெரு வைச் சேர்ந்தவர் சுந்தர் வடிவேல். இவர் தாராபுரம் மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா குழு அலுவலகக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 4 தேர்வில் பங் கேற்று தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அவருக்கு நேர்காண லில் தமிழ்நாடு அரசு கருவூலத் துறை இளநிலை உதவியாள ராக பணி நியமனம் கிடைத்துள்ளது. அம்பேத்கர் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் படித்து அரசுப் பணியில் நியமனம் பெற்றுள்ள சுந்தர் வடிவேல், பயிற்சி மையப் பொறுப்பாளர் என்.கனகராஜை வெள்ளியன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அம்பேத்கர் பயிற்சி மையத்தைச் சேர்ந்தோர் அவ ருக்கு பாராட்டுத் தெரிவித்தனர்.</p>
