சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலை சேதம்!
yesterday
<p>சிதம்பரம் அருகே நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p><p>சிதம்பரம் கொத்தங்குடி கிராமத்தில் பாதுகாப்பு கூண்டில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை மீது நேற்று நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதுகாப்பு கூண்டு உடைத்தெறியப்பட்டு அம்பேத்கர் சிலையில் கண்ணாடி உள்ளிட்ட பகுதிகளை சேதப்படுத்தப்பட்டுள்ளது. </p><p>இதை தொடர்ந்து, அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். </p><p>தகவல் அறிந்த அங்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டு சந்தேகத்தின் அடிப்படையில் 2 இளைஞர்களை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், அந்த இளைஞர்களின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. இதை தொடர்ந்து, பாதுகாப்புக்காக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.</p>
