தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசுப்பள்ளியில் அம்பேத்கர் பிளக்ஸ் படம்!

27 Feb 2026, 5:32 pm
அரசுப்பள்ளியில் அம்பேத்கர் பிளக்ஸ் படம்!
<p><strong>அரசுப்பள்ளியில் அம்பேத்கர் பிளக்ஸ் படம்!</strong></p> <p>திருப்பூர், பிப்.27 - குங்காருபாளையம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு தலைவர்கள் படம் வரைந்ததில் அம்பேத்கர் படம் வரைய முடியாது என பள்ளி நிர்வாகத்தினர், உள்ளூர் ஆதிக்க சக்தியினர் மறுப்புத் தெரிவித்தனர். இது பற்றி தீக்கதிரில் செய்தி வெளியான நிலை யில், முற்போக்கு அமைப்பினர் காவல் துறையில் புகார் தெரிவித்ததால் அங்கு அம் பேத்கர் பிளக்ஸ் படம் ஒட்டப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றி யம், குங்காருபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 1926ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு நூற் றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதை யடுத்து பள்ளியில் வர்ணம் பூசி, சுற்றுச்சுவ ரில் தேசத்தலைவர்கள் படம் வரைந்திட ஏற் பாடு செய்துள்ளனர். காமராஜர், அப்துல்க லாம் உள்பட பல்வேறு தலைவர் படங்கள் வரையப்பட்டன. எனினும் அரசியல் சட்ட சிற்பி அம்பேத்கர் படம் வரையப்படாதது பற்றி உள்ளூரைச் சேர்ந்த சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் அவரை சாதித் தலைவர் என்று சொல்லி, அவர் படத்தை வரைய முடியாது என பள்ளி தரப்பினர் மறுத்துவிட்டதாக கூறினர். இது பற்றி தீக்கதிர் நாளிதழில் வியாழ னன்று செய்தி வெளியிடப்பட்டது. இத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை &nbsp;சிறுத்தைகள், புரட்சிகர இளைஞர் முன்னணி &nbsp;உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு அமைப்பு களின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி, இப்பிரச்சனை குறித்து காங்கேயம் உதவி காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் குங்காருபாளையம் பள்ளியின் சுற்றுச்சுவரின் ஒரு பக்கத்தில் அவ சர அவசரமாக அம்பேத்கர் உருவப்பட பிளக்ஸ் அச்சடித்து, அதை சுவற்றில் ஒட்டி வைத்துள்ளனர். எனினும் இதே சுவற்றில் அம்பேத்கர் படத்திற்கு அருகே வேறு தலை வர்கள் படம் இடம் பெறாதவாறு அழித்து விட்டனர். இது பற்றி சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், சாதிய உணர்வு கொண்டவர்கள்தான் தேசத் தலைவர்களை சாதித் தலைவர் களாக பார்க்கின்றனர். இவர்கள் மனம் மாறி அம்பேத்கர் படத்தை அங்கே வரைந்தி ருந்தால் நல்லது. ஆனால், அம்பேத்கர் படத்தை ஒட்டி வைத்து அருகில் மற்ற தலைவர்கள் படங்களை அழித்திருக்கும் செயல் இவர்களது சாதிய வன்மத்தை காட்டுகிறது. அம்பேத்கரை மட்டுமல்ல, மற்ற தேசியத் தலைவர்களையும் இவர்கள் இழிவுபடுத்தியுள்ளனர், என வேதனையுடன் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.