திருப்பூரில் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் கடைப்பிடிப்பு
6 Dec 2025, 2:48 pm
<p><strong>திருப்பூரில் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் கடைப்பிடிப்பு</strong></p>
<p>திருப்பூர், டிச.6- பாபா சாகேப் அம்பேத்கர் 69 ஆவது நினைவு நாளை முன்னிட்டு திருப்பூரில் உள்ள அண்ணல் அம் பேத்கர் உருவ சிலைக்கு பல்வேறு முற்போக்கு அமைப்புகள் மாலை அணிவித்தனர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பா.ஞானசேகர் தலைமையில், மாவட்டச்செயலாளர் ஆர்.பரம சிவம், பொருளாளர் சண்முகம், மாவட்டத் துணைத்தலைவர் ச.நந்த கோபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகர செயலா ளர் டி.ஜெயபால் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். இதைதொடர்ந்து இந்திய ஜனநா யக வாலிபர் சங்க மாவட்டத் தலை வர் க.நிருபன்சக்கரவர்த்தி தலை மையில் பொருளாளர் க.சிந்தன், செயற்குழு உறுப்பினர் விவேக், தெற்கு மாநகர செயலாளர் மௌனிஷ், மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் மணிகண்டன் உள் ளிட்ட பலர் பங்கேற்று மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர். மேலும், இதில் இந்துத்துவ சக்திக ளிடம் இருந்து மதச்சார்பற்ற ஜனநா யக இந்தியாவைப் பாதுகாக்க போராட்டங்களை முன்னெடுப் போம், அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்து கொண்டனர். மாதர் சங்க ஊத்துக்குளி தாலுகா குழு சார்பில் குன்னத்தூர் சாலையில் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அதேபோல் இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.செந்தில் குமார், ஏஐடியுசி மாநிலச் செயலா ளர் என்.சேகர், மாவட்ட பொதுச் செயலாளர் பி.ஆர்.நடராஜன் மற் றும் மாமன்ற உறுப்பினர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர். திரவிடர் விடுதலைக் கழக மாநகர அமைப்பாளர் இரா.சரசு வதி தலைமையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தி, சாதி ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்ட னர். உடுமலை மடத்துக்குளம் அருகே ருத்ரா பாளையத்தில் தலித் இஸ்லாமியர் எழுச்சி நாள் கடைபிடிக்கப்பட்டது. ருத்ராபாளையம் பேருந்து நிலை யத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் படம் வைக்கப்பட்டு மலர் தூவி திருப்பூர் தெற்கு மாவட்டச் செயலா ளர் சதீஸ்குமார் தலைமையில் மரி யாதை செலுத்தப்பட்டது. இஸ்லா மிய சனநாயக பேரவை உடுமலை இப்ராஹிம் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
