தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் கரூர் மாவட்டத்தில் 89 பேருக்கு கடனுதவி: ஆட்சியர் தகவல்

3 Dec 2025, 2:59 pm
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் கரூர் மாவட்டத்தில் 89 பேருக்கு கடனுதவி: ஆட்சியர் தகவல்
<p><strong>அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் கரூர் மாவட்டத்தில் 89 பேருக்கு கடனுதவி: ஆட்சியர் தகவல்</strong></p> <p>கரூர், டிச.3 - &ldquo;நிறைந்தது மனம்&rdquo; நிகழ்ச்சியின் மூலம் மாவட்ட தொழில் மையத்தின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் செயல்பாடு கள் குறித்து புதனன்று மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக் கையில், &ldquo;கரூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத் தின்கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 89 நபர்களுக்கு ரூ. 11.26 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விருப்பமுள்ளவர்கள் மாவட்ட தொழில் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்&rdquo; என்றார். &nbsp;அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் பயன்பெற்ற &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;பிரியங்கா தெரிவிக்கையில், &ldquo;நான் பி.காம் படித்துள்ளேன். கரூர் தாந் தோன்றிமலை பகுதியில் வசித்து வரு கிறேன். எனது கணவர் தனியார் நிறுவ னத்தில் பணிபுரிந்து வருகிறார். நான் &nbsp;அழகு கலை சார்ந்த பயிற்சி பெற்று உள்ளேன். இதனால் நீண்ட நாட்களாக தனியாக அழகு கலை மற்றும் மணப்பெண் &nbsp;அலங்காரம் சார்ந்த தொழில் செய்ய முடி வெடுத்து அது தொடர்பாக ஆலோசித்து வந்தேன். &nbsp; என்னிடம் தொழில் தொடங்குவதற்கு தேவையான மூலதன நிதி இல்லை. அப்போது எனது தோழி மூலம் மாவட்ட &nbsp;தொழில் மையத்தில் தொழில் தொடங்கு வதற்கு கடன் பெறுவதைப் பற்றி தெரிந்து &nbsp;கொண்டேன். இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவ தற்கு விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை பரிசீலித்து எனக்கு ரூ.5 &nbsp;லட்சம் கடன் வழங்கினர். &nbsp;நகரின் மையப் பகுதியில் நான் இந்த ஸ்டுடியோவை தொடங்கினேன். &nbsp;இங்கு மணப்பெண் ஒப்பனை, சிகை அலங்காரம் மற்றும் கூத்தர் பூட்டிக் உடைகள் ஆகிய சேவை களை வழங்கி வருகிறேன். இதன்மூலம் நான் மாதம் ரூ. 30,000 முதல் 40,000 &nbsp;வரை வருமானம் பெறுகிறேன். &nbsp;முதல்வ ருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்&rdquo; என்றார். பயனாளி க.அமுதவல்லி கூறுகை யில், &ldquo;நான் வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் தயாரிக்கும் தொழில் தொடங்க எண்ணியிருந்தேன். அண்ணல் &nbsp;அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் பற்றி அறிந்தேன். இதனைத் தொ டர்ந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து மாவட்ட தொழில் மைய அலுவலகம் மூலம் ரூ.6,41,000/-வங்கி கடன் பெற்று திட்ட மதிப்பீட்டில் 35% &nbsp;மானி யம் மற்றும் 6% வட்டி மானியமும் பெற்றேன். &nbsp;இத்தொழில் மூலம் மாதம் ரூ.2,50,000/-வருவாயும், ரூ.66,000/- லாபமும் ஈட்டுகிறேன். இத்திட்டம் என்னைப் போன்ற தாழ்த்தப்பட்ட மகளி ரின் சுய தொழில் தொடங்கும் கனவு நிறை வேற உதவியாக உள்ளது. எனவே முதல்வருக்கு &nbsp;எனது நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன்&rdquo; என்றார். தொகுப்பு: &nbsp;க.செந்தில்குமார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், &nbsp;கரூர் மாவட்டம்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.