கோவில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள் கொள்ளை
yesterday

கோவில் பூட்டை உடைத்து வெள்ளிப் பொருட்கள் கொள்ளை

அம்பத்தூர், நவ.12-அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் பிரதானச் சாலையில் உள்ள டைனி செக்டர் வளாகத்தில் ஸ்ரீ ஐஸ்வர்யா கணபதி கோயில் உள்ளது. வழக்கம் போல் பூசாரி ஹரிஹரசுதன் (46) புதன்கிழமை இரவு கோயில் கதவுகளை பூட்டி விட்டுச் சென்றார். வியாழக்கிழமை காலை அவர் கோவிலை திறக்க வந்த போது, ஆலயத்தின் நுழைவாயில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஹரிஹரசுதன் உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த உண்டியலை உடைக்காமல், அலமாரியில் இருந்த வெள்ளிப் பொருட்களையும், பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

தகவல் அறிந்து ஆலயத்தின் தலைவர் கொரட்டூரைச் சேர்ந்த தியாகராஜன் (60) என்பவர், நிர்வாகிகளுடன் வந்தார். அதன் பிறகு அவர் கோயில் அலமாரியை சோதனை செய்த போது, ரூ.14 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களும், ரூ.5,000 பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தரிய வந்தது.

இது குறித்து அவர், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்ன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 வாரத்திற்கு முன்பு அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் சிக்னல் சந்திப்பு அருகில் உள்ள ஸ்ரீ நாகவல்லி அம்மன் கோயில் கதவை உடைத்து ரூ.1லட்சம் உண்டியல் பணம், அம்மன் தாலி ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.