தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குண்டும் குழியுமாக மாறிய அத்திப்பட்டு ரெட்டி தெரு சாலை

7 Aug 2026, 11:53 pm
குண்டும் குழியுமாக மாறிய அத்திப்பட்டு ரெட்டி தெரு சாலை

குண்டும் குழியுமாக மாறிய அத்திப்பட்டு ரெட்டி தெரு சாலை

அம்பத்தூர், ஆக.7-அம்பத்தூர் அத்திப் பட்டு ரெட்டி தெரு, பிகேஎம் சாலை வழியாக அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் சாலை முற்றி லும் பழுதடைந்து குண்டும்

குழியுமாக காட்சிய ளிக்கின்றன.

அம்பத்தூர் அருகே உள்ள அயப்பாக்கம், எம்.ஜி.ஆர்.புரம், அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியி ருப்பு, ஐயப்பா நகர், செல்லி யம்மன் நகர், ஐசிஎப் காலனி, கலைவாணர் நகர், பாரதிதாசன் நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பேஸ் 1, 2, 3 அத்திப்பட்டு ஆகிய பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.

அம்பத்தூர் தொழிற் பேட்டை, மதுரவாயல், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் இருந்து வருவோர் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் இந்த சாலை பல மாதங்களாக பரா மரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் சரி யான மின்விளக்கு வசதி இல்லாததால் வயதா னவர்கள், வாகன ஓட்டிகள் அடிக்கடி பள்ளத்தில் விழுவதாக அப்பகுதி மக்கள்

கூறுகின்றனர்.

அதேபோல்முறையான மழைநீர் வடி கால் வசதி இல்லாததால், மழைக்காலங்களில் மழை நீர் சாலையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.தினசரி ஆயிரக்கணக் கான தொழிலாளர்களும், வாகன ஓட்டிகளும் இந்த சாலையை பயன்படுத்து கின்றனர். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.