தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமெரிக்காவில் அம்பானி ரூ.25.2 லட்சம் கோடி முதலீடு: எரிசக்தி ஆதிக்கத்திற்கு உதவி செய்ததாக டிரம்ப் நன்றி

11 Mar 2026, 3:52 pm
அமெரிக்காவில் அம்பானி ரூ.25.2 லட்சம் கோடி முதலீடு: எரிசக்தி ஆதிக்கத்திற்கு உதவி செய்ததாக டிரம்ப் நன்றி
<p><strong>அமெரிக்காவில் அம்பானி ரூ.25.2 லட்சம் கோடி முதலீடு: எரிசக்தி ஆதிக்கத்திற்கு உதவி செய்ததாக டிரம்ப் நன்றி</strong></p> <p>வாஷிங்டன் அமெரிக்காவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு &nbsp;நிலையம் அமைக்க அம்பானி சுமார் 25.2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். &nbsp;இதனை குறிப்பிட்டுள்ள டிரம்ப் உலகின் மீது எங்களது எரிசக்தி ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்ட உள்ளோம் என சொன்னதுடன் அம்பானிக்கு நன்றியும் கூறியுள்ளார். &nbsp; சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு டெக்சாஸ் மாகாணம் பிரவுன்ஸ்வில்லில் அமெரிக்காவின் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது. இதற்காக, அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சுமார் 25.2 லட்சம் கோடி ரூபாய் (300 பில்லியன் டாலர்கள்) முதலீடு செய்துள்ளார். &nbsp;இந்நிலையில் தனது &lsquo;ட்ரூத் சோஷியல்&rsquo; தளத்தில் அது குறித்து பதிவிட்ட டிரம்ப், அமெ ரிக்கா மீண்டும் சர்வதேச அளவில் எரிசக்தி துறை களின் மீது ஆதிக்கம் செலுத்த உள்ளது. &nbsp;பிரவுன்ஸ்வில்லில் &lsquo;அமெரிக்கா ஃபர்ஸ்ட் ரிஃபைனிங்&rsquo; (America First Refining) நிறுவனம் தனது புதிய சுத்திகரிப்பு நிலையத்தைத் திறக்கவுள்ளது என்பதைப் பெருமையுடன் தெரிவிக்கிறேன். &nbsp;இது 300 பில்லியன் டாலர் மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம். எங்களது இந்திய நண்பர்களுக்கும், அந்நாட்டின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான ரிலையன்ஸ்-க்கும் இந்த திட்டத்தில் செய்துள்ள மிகப்பெரிய அளவிலான முத லீட்டிற்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கி றேன் என குறிப்பிட்டுள்ளார். குஜராத்தின் ஜாம்நகரில் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனம் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு &nbsp;நிலையத்தை நடத்தி வருகிறது. இந்நிறுவனம் ரஷ்யாவிடம் குறைந்த விலைக்கு கச்சா எண்ணெய் வாங்கி சுத்திக ரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெருத்த லாபம் ஈட்டி வந்தது. இச்சூழலில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என &nbsp;டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் இந்நிறுவ னத்தின் லாபம் பெருமளவு குறைந்தது. &nbsp;தற்போது ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேலின் போரால் சர்வதேச அளவில் எண்ணெய் சுத்திகரிப்பு, ஏற்றுமதி என எரிசக்தி தொடர்பான அனைத்து வர்த்தகமும் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெ ரிக்காவில் &nbsp;முதலீடு செய்வது தனது நிறுவ னத்திற்கு பாதுகாப்பு என அம்பானியின் நிறுவ னம் முடிவெடுத்து இருப்பதாகக் கூறப்படு கிறது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.