முந்தய பக்கம்

அமேசான் சரக்கு விமான விபத்து: 5 பேர் உயிரிழப்பு!

7 Sept 2026, 3:29 pm
அமேசான் சரக்கு விமான விபத்து: 5 பேர் உயிரிழப்பு!
<p>அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மயாமி சர்வதேச விமான நிலையத்தில், அமேசான் நிறுவனத்தின் சரக்கு விமானம் ஓடுபாதையைத் தாண்டிச் சென்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.</p><p>போர்ட்டோ ரிகோவில் உள்ள சான் ஜுவான் நகரில் இருந்து புறப்பட்ட &#39;21 ஏர்’ நிறுவனத்தால் இயக்கப்படும் அமேசான் பிரைம் ஏர் &#39;போயிங் 767-300’ சரக்கு விமானம், மயாமி விமான நிலையத்தில் பிற்பகல் 2:00 மணியளவில் தரையிறங்க முயன்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் 9,000 அடி நீளமுள்ள ஓடுபாதையைத் தாண்டி அருகில் இருந்த சாலைக்குச் சென்று அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது பலமாக மோதி தீப்பிடித்தது.</p><p>இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், காயமடைந்த 5 பேரில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தினர். விபத்தைத் தொடர்ந்து மயாமி விமான நிலையத்தின் அனைத்து ஓடுபாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டு, விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.</p><p>தரையைத் தொடுவதற்கு முன்பு விமானிகள் எந்தவித அவசரகால எச்சரிக்கையையும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், அமெரிக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகமும் (FAA) தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் (NTSB) விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்தத் துயரச் சம்பவத்திற்கு அமேசான் நிறுவனம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram