ஓசூரில் அமெச்சூர் சதுரங்கப் போட்டி
1 Mar 2026, 5:56 pm
<p><strong>ஓசூரில் அமெச்சூர் சதுரங்கப் போட்டி </strong></p>
<p>கிருஷ்ணகிரி, மார்ச்.1- ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் 13-வது தேசிய அளவிலான அமெச்சூர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கி 2 நாட்களாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 1-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியின் தொடக்க விழாவில், தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத் தலைவர் மாணிக்கம் மற்றும் உலக சதுரங்கக் கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் சுந்தர் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர். இதில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து 1200-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இவ்விழாவில், தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகச் செயலாளர் ஸ்டீபன் பாலசாமி, இந்தியன் வங்கி முன்னாள் அதிகாரி ஸ்டீபன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். இப்போட்டிகள் தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழக இணைச் செயலாளர் பிரகதீஷ், கிருஷ்ணகிரி மாவட்ட சதுரங்க விளையாட்டு குழுச் செயலாளர் லோகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.</p>
