முந்தய பக்கம்

காஷ்மீரில் ஹிஜாப் அணிந்த பெண்களை நோக்கி கோஷமிட்ட அமர்நாத் யாத்ரீகர்கள்

17 Jul 2026, 8:20 pm
காஷ்மீரில் ஹிஜாப் அணிந்த பெண்களை நோக்கி கோஷமிட்ட அமர்நாத் யாத்ரீகர்கள்
<p><strong>காஷ்மீரில் ஹிஜாப் அணிந்த பெண்களை நோக்கி கோஷமிட்ட அமர்நாத் யாத்ரீகர்கள்</strong></p><p>காஷ்மீரில் அமர்நாத் யாத்தி ரை சென்ற குழுவினர், ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்திருந்த பெண்களைப் பார்த்து மதரீதியான கோஷ ங்களை எழுப்பும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு, அமர்நாத் குகைக்குப் பேருந்தில் பயணம் செய்த ஒரு குழுவினர், ஹிஜாப் மற்றும் புர்கா அணிந்திருந்த பெண்களைக் கண்டதும், வாகனத்தின் ஜன்னல் வழி யாக வெளியே சாய்ந்து ‘ஹர் ஹர் மகா தேவ்’ என்று கோஷமிட்டனர். இதில் ஒரு வர், ஹிஜாப் அணிந்த சிறுமிகள் மற்றும் பெண்களை நோக்கி கைகளை அசை த்து, உரத்த குரலில் கோஷங்களை எழுப்பு வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவைப் பகிர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா, “காஷ்மீர் வீதிகளில் ஹிஜாப் அணிந்த சிறுமிகளின் முன் நின்று ‘ஹர் ஹர் மகாதேவ்’ என்று கோஷமிடுவதை விட முட்டாள்தனமான விஷயம் வேறென்ன இருக்க முடியும்?. அமர்நாத் யாத்திரை மேற்கொள்வது ஒவ்வொரு இந்துவின் உரிமை என்றாலும், அந்தப் பிராந்திய மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டி யது ஒவ்வொரு யாத்ரீகரின் பெரும் கட மையாகும்” என தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram