அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டால் போராட்டம் ஆட்சியரிடம் விவசாயிகள் எதிர்ப்பு
13 Jul 2026, 10:32 pm
<p><strong>அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டால் போராட்டம் ஆட்சியரிடம் விவசாயிகள் எதிர்ப்பு</strong></p><p>திருப்பூர், ஜூலை 13 - அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டால் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சந்தித்து எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகா செயலாளர் எம்.எம்.வீரப்பன் தலைமையில் அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு விவசாயிகள் திங்களன்று மாவட்ட ஆட்சியர் மக்கள் குறை தீர் கூட்டத்திற்கு வந்தனர். அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கூறியதாவது: அமரா வதி அணையில் இருந்து வரும் 15 ஆம் தேதி குடிநீர் தேவைக்காக அம ராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப் போவதாக தகவல் வந்துள் ளது. கடந்த மாதம் தான் குடிநீருக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இந்த தண்ணீரை 50 சதவி கிதம் தொழிற்சாலைகளும், 50, 100 ஏக்கர் நிலம் வைத்திருக்கும், இந்த ஆயக்கட்டி இல்லாத திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளும் தான் பயன்படுத்துகின்றனர். இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஆற்றின் குறுக்கே சிறு, சிறு தடுப்பணைகள் ஏற்படுத்தி தண்ணீரை எடுக்கின்ற னர். இதனால் ஆயக்கட்டு விவசாயி கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியா கிறது. குறிப்பாக அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. கால்நடைகள் குடிநீருக்கும் பற்றாக்குறை உள் ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் பழைய ஆயக் கட்டுக்கு பாசன நீரும், புதிய ஆயக் கட்டுக்கு 20 நாட்கள் உயிர் நீரும் வழங்குவது வழக்கம். ஆனால் இந் தாண்டு வழக்கத்திற்கு மாறாக குடி நீருக்கு என ஆற்றில் தண்ணீர் திறப் பது 55 ஆயிரம் ஏக்கர் விவசாயி களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும். எனவே வரும் 15ஆம் தேதி ஆற்றில் தண் ணீர் திறந்து விடக் கூடாது, ஆயக் கட்டு விவசாயிகளின் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். விவசாயிகளின் கருத்தைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே, இது குறித்து பரிசீலித்து முடிவு செய்வதாகவும், 16ஆம் தேதி நேரில் அங்கு வந்து ஆய்வு செய்வதாகவும் தெரிவித் தார். அதேசமயம் குடிநீருக்கு ஆற் றில் தண்ணீர் திறந்து விடப்பட்டால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் அமராவதி ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்துவோம் என்றும் எம்.எம்.வீரப்பன் கூறினார்.</p>
