அமராவதி அணையிலிருந்து ஆயக்கட்டு பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு!
21 Jul 2026, 10:51 pm

அமராவதி அணையிலிருந்து ஆயக்கட்டு பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு!

உடுமலை, ஜூலை 21- திருப்பூர் மாவட்டம் உடு மலையை அடுத்துள்ள அமராவதி அணையிலிருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங் கள் மற்றும் குடிநீர் தேவைக்காக செவ்வாயன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. மொத்தம் 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையின் மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக் கட்டு பாசனப் பகுதிகளுக்கு அமரா வதி ஆற்று வழியாகவும், புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்கு பிர தான கால்வாய் வழியாகவும் தண் ணீர் விநியோகிக்கப்பட்டு வருகி றது. மேலும், ஆற்றின் வழியோரத் திலுள்ள நூற்றுக்கணக்கான கிரா மங்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலான குடி நீர்த் திட்டங்களும் இதன் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது பாசனப் பகுதிகளில் போதிய மழை இல்லாததால் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பயிர்களை காப்பாற்ற அணையி லிருந்து தண்ணீர் திறந்து விட வேண் டும் என்று பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். விவ சாயிகளின் கோரிக்கையை ஏற்று, பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அமராவதி புதிய ஆயக்கட் டுக்குட்பட்ட 25 ஆயிரத்து 250 ஏக்கர் பரப்பளவில் நின்று கொண்டி ருக்கும் பயிர்களை காப்பாற்ற (சிறப்பு நனைப்பு) மற்றும் குடிநீர் தேவைக்காக செவ்வாய்க்கிழமை முதல் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை (15 நாட்களுக்கு) தண்ணீர் திறக்கப்படுகிறது. அமராவதி பிர தான கால்வாய் வழியாக வினா டிக்கு 440 கன அடி வீதம், மொத்தம் 570.24 மில்லியன் கன அடி தண் ணீர் திறந்து விடப்படுகிறது.

பழைய ஆயக்கட்டு பாசனம்

அமராவதி ஆற்றில் அமைந் துள்ள ராமகுளம், கல்லாபுரம், குமர லிங்கம், சர்க்கார் கண்ணாடி புத் தூர், சோழமாதேவி, கணியூர், கடத் தூர் மற்றும் காரத்தொழுவு ஆகிய 8 பழைய ராஜ வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறும் 7 ஆயிரத்து 520 ஏக்கர் நிலங்களின் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக் கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 3-ஆம் தேதி வரையி லான 135 நாட்களில், 80 நாட்கள் தண்ணீர் திறப்பு மற்றும் 55 நாட்கள் நீர் அடைப்பு என்ற சுழற்சி முறை யில் (தகுந்த இடை வெளியுடன்), வினா டிக்கு 300 கனஅடி வீதம் மொத்தம் 2,074 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட வுள்ளது. செவ்வாயன்று காலை நிலவரப்படி, 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணையின் நீர்மட்டம் 51.45 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு53 கன அடி யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.