முந்தய பக்கம்

அமராவதி அணையில் பாசன விவசாயிகள் போராட்டம்

15 Jul 2026, 10:57 pm
அமராவதி அணையில் பாசன விவசாயிகள் போராட்டம்
<p><strong>அமராவதி அணையில் பாசன விவசாயிகள் போராட்டம்</strong></p><p>உடுமலை, ஜூலை 15- அமராவதி அணையின் புதிய பாசனக் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புதனன்று அணையின் மதகு பகுதியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரம் பகுதியின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து புதன்கிழமை முதல் ஆற்றில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள், தங்கள் பகுதிகளில் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து வருவதால், முதலில் பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு உயிர்த்தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்திற்கு தலைமை வகித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மடத்துக்குளம் தாலுகா செயலாளர் எம்.எம். வீரப்பன் கூறுகையில், “இரண்டாவது முறையாக குடிநீருக்கு தண்ணீர் திறப்பதை ஏற்க முடியாது; பயிர்களைக் காக்க உடனே தண்ணீர் திறக்க வேண்டும்,” என்றார். விவசாயிகளின் உறுதியான போராட்டத்தால், குடிநீருக்கு தண்ணீர் திறக்கும் நடவடிக்கை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க உடுமலை டி.எஸ்.பி தையல்நாயகி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram