தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமராவதி அணையை தூர்வாரி கொள்ளளவை உயர்த்த வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

1 Oct 2026, 12:39 am
அமராவதி அணையை தூர்வாரி கொள்ளளவை உயர்த்த வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

அமராவதி அணையை தூர்வாரி கொள்ளளவை உயர்த்த வேண்டும்: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

உடுமலை, செப். 30-அமராவதி அணையில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றி, அணையின் நீர்க்கொள்ளளவை அதிகரிக்க பொதுப்பணித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள்சங்கத்தின் மடத்துக்குளம் தாலுகாக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்

கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏராளமான கிராமங்களின்குடிநீர் தேவையையும் அமராவதி அணை பூர்த்தி செய்து வருகிறது.

பல ஆண்டுகளாக அணையில் வண்டல் மண் படிந்து வருவதால், நீர்த்தேக்க பகுதியில் பெருமளவில் மண் மேடுகள் உருவாகியுள்ளன. இதனால் அணையின் முழு கொள்ளளவையும் பயன்படுத்தி தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் அணைக்கு அதிக அளவில் நீர்வரத்து ஏற்படும் போது, போதிய நீரைச் சேமிக்க முடியாமல் ஆற்றுப்பகுதிக்கு உபரி நீரை திறந்துவிட வேண்டியசூழல் ஏற்படுகிறது.

எனவே, எதிர்காலத்தில் கிடைக்கும் மழைநீரை முழுமையாகச் சேமிக்கும் வகையில் அமராவதி அணையை தூர்வாரி, நீர்த்தேக்க கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடியாகும். தற்போது அணையில் 41.34 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால், அணைக்கான நீர்வரத்தும் 18 கனஅடியாக குறைந்துள்ளது.நீர்வரத்து குறைந்துள்ள தற்போதைய சூழலை பயன்படுத்தி, நீர்த்தேக்கப் பகுதியில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணியை எளிதாக மேற்கொள்ள முடியும். இதன் மூலம் அணையின் நீர்க்கொள்ளளவு அதிகரிப்பதுடன், எதிர்வரும் மழைக்காலங்களில் கூடுதலாக தண்ணீரை சேமிக்க இயலும்.

மேலும், அணையில் இருந்து தூர்வாரி எடுக்கப்படும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிட வேண்டும். வண்டல் மண்ணை விவசாய நிலங்களில் பயன்படுத்துவதன் மூலம் மண் வளமும், பயிர் விளைச்சலும் மேம்படும். எனவே, அமராவதி அணையை தூர்வாரும் பணியை தாமதமின்றி தொடங்குவதுடன், அகற்றப்படும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு வழங்கிட பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்கேட்டுக்கொண்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.