மக்களின் பாதுகாவலர்கள் இடதுசாரிகள் மட்டுமே தட்டாஞ்சாவடியில் சலீம் தீவிர பிரச்சாரம்
1 Oct 2026, 1:10 am

மக்களின் பாதுகாவலர்கள் இடதுசாரிகள் மட்டுமே தட்டாஞ்சாவடியில் சலீம் தீவிர பிரச்சாரம்

புதுச்சேரி, செப்.30-மக்களின் பாதுகாவலர்கள் இடதுசாரிகள் மட்டுமே என தட்டாஞ்சாவடி யில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அ.மு. சலீம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் இடதுசாரிகட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அ.மு.சலீம் வேட்பாளராக போட்டியிடுகிறார். தொகுதிக்குட்பட்ட தாகூர் நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் வீடு வீடாக மக்களை சந்தித்து கதிர் அரி வாள் சின்னத்தில் வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது: எதிர் அணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஊழல் குற்றம் புரிந்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவரையே திமுக வேட்பாள ராக அறிவித்திருக்கிறது. பேரியக்கம் என்று கூறும் காங்கிரஸ் கட்சி, மாற்றுக்கட்சியை சேர்ந்தவரை தங்கள் கட்சியில்இணைத்து வேட்பாளராக அறிவித்துள்ளது. இவர்களுக்கு மத்தியில் அன்றாடம் மக்கள் பிரச்சனைக்காக வீதியில்இறங்கி குரல் கொடுத்து வரும் இடதுசாரி கட்சிகளின் சார்பில் என்னை நிறுத்தியுள்ளனர். எனக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இடதுசாரிகள்மட்டுமே மக்களின் பாதுகாவலர்கள், இடதுசாரிகள் சார்பில் போட்டியிடும் என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.இப்பிரச்சாரத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராஜாங்கம், கொளஞ்சியப்பன் கமிட்டிசெயலாளர் ராம்ஜி, உறுப்பினர்கள் அரிகிருஷ்ணன், சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள்நாரா.கலைநாதன்,சுப்பையா, ரவிச்சந்திரன்,அந்தோணி, எழிலன், செல்வம், பாலகிருஷ்ணன், மோதி லால் உட்பட திரளான இடது சாரி கட்சிகளின்தலைவர்கள். தொண்டர் கள் கலந்து கொண்டனர்.