மூன்று நிமிடத்தில் அல்சைமர்ஸைக் கண்டறியலாம் - சிதம்பரம் இரவிச்சந்திரன்
31 Jan 2026, 5:27 pm
<p><strong>மூன்று நிமிடத்தில் அல்சைமர்ஸைக் கண்டறியலாம்</strong></p>
<p>மூன்று நிமிட சோதனை மூலம் அல்சைமர்ஸ் (Alzheimer’s) ஆபத்தில் உள்ளவர்களை எளிதில் கண்டறியும் ஒரு புதிய முறையை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். வழக்கமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதற்கு பல நாட்களுக்கு முன்பே அல்சைமர்ஸுடன் தொடர்புடைய நினைவாற்றல் குறைபாடுகளை இந்த புதிய முறையின் மூலம் கண்டறியலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருந்து சிகிச்சையை முன்கூட்டியே தொடங்கமுடியும். ஆரம்பகட்ட சோதனைகள் லேசான அறிவாற் றல் குறைபாடு (mild cognitive impairment (MCI)) உள்ளவர்களை கண்டறிய உதவியது. அதிக பங்கேற்பாளர்களுடன் இந்த முறை இப் போது விரிவாக நடைபெறுகிறது. இந்த முறை யில் பயன்படுத்தப்படும் விரைவுப் பந்து பரி சோதனை (Fastball test) என்பது அல்சைமர்ஸ் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உத வும் ஒரு புதிய மூளை அலைகள் பரிசோதனை முறை. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இது ஒரு விரைவான, ஆக்கிரமிப்பற்ற, செயலற்ற பரி சோதனை முறையாகும். இப்பரிசோதனையில் மூளையின் மின் செயல்பாட்டை அளவிட, பதிவு செய்ய பயன்படும் முக்கிய மருத்துவக் கருவி யின் ஒரு வடிவமாக (electroencephalogram EEG)) பயன்படுத்தப்படுகிறது. இக்கருவியில் உள்ள சிறிய உணரிகள் மூளையின் செயல்பாடு களை பதிவுசெய்கிறது. சோதனையின் போது இந்த பதிவுகளை பங்கேற்பாளர்கள் திரையில் காணலாம். மூளை தானியங்கி முறையில் படங்களைப் பார்க்கும்போது வெளியிடும் பதில்வினைகளை இந்த சோதனை பகுப்பாய்வு செய்து பங்கேற் பாளரின் நினைவாற்றல் பிரச்சனைகளை கண்ட றிகிறது. “இந்த பரிசோதனை முறை அல் சைமர்ஸ் பாதிப்பை கண்டறியாதவர்களுக்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டது” என்று இந்த பரிசோதனை முறை உருவாக்கப்பட்ட பாத் (Bath) பல்கலைக்கழக அறிவாற்றல் திறன் பிரிவு நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் ஜியார்ஜ் ஸ்டோத்தார்ட் (Dr George Stothart) கூறு கிறார். இந்த முறைக்கான பரிசோதனைகள் பிரிஸ்ட்டல் (Bristol) பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த ஆய்வுகளில் ஆரோக்கியமான 54 பேர் மற்றும் லேசான அறிவுத் திறன் பாதிப்புள்ள 52 பேர் கலந்துகொண்ட னர். லேசான அறிவுத் திறன் பாதிப்பு உள்ளவர் களுக்கு நினைவாற்றல், சிந்தித்தல், மொழி ஆற்றலில் பிரச்சனைகள் காணப்படுகிறது. இத னால் இவர்களின் அன்றாடச் செயல்கள் பாதிக் கப்படுகின்றன. எட்டுப்படங்கள் சோதனைக்கு முன்பு பங்கேற்ற தன்னார்வலர் களிடம் 8 படங்கள் காட்டப்பட்டன. அவற்றின் பெயர்கள் கேட்கப்பட்டன. அவற்றை குறிப் பாக நினைவில் வைத்துக்கொள்ளச் சொல்லப் படவில்லை. சோதனையின்போது அந்தப் படங்கள் வருகின்றனவா என்று பார்க்கச் சொல்லப்படவில்லை. பிறகு பங்கேற்பாளர் களின் மூளை செயல்பாடுகள் பதிவு செய்யப் பட்டன. அப்போது திரையில் நூற்றுக்கணக்கான படங்கள் வந்தன. விநாடியில் மூன்றில் ஒரு பகுதி நேரத்திற்கு அவை திரையில் இருந்தன. எட்டில் ஒரு படம் அவர்கள் முன்பே பார்த்தது. பொருட்கள் பற்றிய நினைவுத் திறனை பாதிக்கும் ஆம்னெஸ்டிக் லேசான அறிவுத் திறன் குறைபாடு (amnestic MCI) உள்ளவர்களின் மூளை செயல் பாடு இவ்வகை பாதிப்பு இல்லாதவர்களை விட குறைவாக இருந்தது. இந்த குறைபாடு உள்ள வர்கள் அல்சைமர்ஸ் நோயால் பாதிக்கப்படு வதற்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகம். மருந்து சிகிச்சை யார் யாருக்கு அல்சைமர்ஸ் நோய் வரும் என் பதை இந்த முறை அடையாளம் காண உதவாது என்றாலும் விரிவான ஆய்வுகள் நடத்தப்படும் போது எவ்வகை நோயாளிகள் அல்சைமர்ஸால் பாதிக்கப்படுவர் என்பதை மருத்துவர்கள் முன் கூட்டியே பகுப்பாய்வு செய்து கண்டறியமுடி யும். இதன் மூலம் அல்சைமர்ஸிற்கான டோனன்மேஃப் (donanemab) மற்றும் லெக்கேன்மேஃப் (lecanemab) போன்ற புதிய மருந்துகளை நோயாளிகளுக்குக் கொடுத்து சிகிச்சையை தொடங்கலாம். இப்பரிசோதனைகள் அனைத்தும் பங் கேற்பாளர்களின் வீடுகளிலேயே செய்யப்பட் டது. இதனால் பங்கேற்பாளர்கள் பரிசோதனை களை சுலபமாக பெற்றனர். ஆய்வின்போது ஏற்படும் பதற்றம் குறைந்தது. இது பற்றிய ஆய்வுக் கட்டுரை மூளை தகவல் தொடர்புகள் (Brain Communications) என்ற இதழில் வெளி வந்துள்ளது. “கிளினிக்கல் முறையில் பயன்படும் விதத்தில் இந்த ஆரம்ப கட்ட பரிசோதனை உரு வாக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த நிலையில் காலப்போக்கில் ஒரு நோயாளியிடம் ஏற்படக்கூடிய மாற்றங்களை இம்முறை உதவுவது பற்றி முன்கூட்டியே கணிக்க ஆராயப்படுகிறது. சிகிச்சையை இதன் மூலம் மருத்துவர்கள் நோயாளியிடம் தெரிவிக்க முடியும்” என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி (UCL) குயீன்ஸ்ஸ்குயர் நரம்பியல் கழக (Queen Square Institute of Neurology) விஞ்ஞானி பேராசிரியர் விளடிமிர்லிட்வாக் (Prof Vladimir Litvak) கூறுகிறார். “மறதி பிரச்சனைகளை முன்கூட்டியே கண்ட றிய உதவும் இந்த கண்டுபிடிப்பு ஊக்கமளிப்ப தாக உள்ளது. நோயை ஆரம்பத்தில் கண்டறி யும் வழிமுறைகள் பயனுள்ளவை. பலதரப்பட்ட மக்களிடம் இது பற்றி நீண்ட கால ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். மறதிக் குறைபாடு காலப்போக்கில் பாதிக்கப்பட்டவர்களிடையில் உருவாகும் விதத்தை இத்தொழில்நுட்பம் முன்கூட்டியே கணித்துக் கூற உதவுவது பற்றி ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. டிமென்சியா மட்டும் அல்லாமல் மற்ற நோய் களுடனும் மறதி தொடர்புடையது. அதனால் அறிவாற்றல் மதிப்பீடு, இரத்தப் பரிசோதனை போன்ற மற்ற பகுப்பாய்வுகளுடன் சேர்ந்து இந்த மூளை அலை பரிசோதனை தரும் பயன் பற்றி வருங்காலத்தில் ஆராயப்படும்” என்று யுகே அல்சைமர்ஸ் அமைப்பின் (Alzheimer’s Research UK) டாக்டர் ஜூலியா டட்லி (Dr Julia Dudley) கூறுகிறார். வருங்காலத்தில் அல்சை மர்ஸ் ஆய்வில் இந்த புதிய முறை ஒரு திருப்பு முனையாக அமையும் என்று நம்பப்படுகிறது.</p>
