விளையாட்டு
8 Mar 2026, 3:42 pm

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விடைபெற்றார் அலிசா ஹீலி

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை அலிசா ஹீலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஞாயிறன்று ஓய்வு பெற்றார். பெர்த் நகரில் (ஆஸ்திரேலியா) இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற பக லிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்தி ரேலிய 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி யுடன் தனது 16 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்தை அலிசா ஹீலி நிறைவு செய்துள்ளார். 2010ஆம் ஆண்டு நியூஸி லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி யில் அறிமுகமானஅலிசா ஹீலி, அதே ஆண்டில் அதே அணிக்கு (நியூ ஸிலாந்து) எதிராக டி-20 போட்டிகளி லும், 2011ஆம் ஆண்டு இங்கி லாந்துக்கு எதிராக டெஸ்டிலும் அறிமுகமானார். விக்கெட் கீப்பிங், அதிரடி பேட்டிங், கேப்டன் பொறுப்பு என 16 ஆண்டுகாலம் மகளிர் கிரிக்கெட் உலகில் பம்பரமாக சுழன்று வந்த அலிசா ஹீலி (35), 126 ஒரு நாள் போட்டிகளில் 3,777 ரன்கள் (8 சதங்கள்), 162 டி-20 போட்டிகளில் 3,054 ரன்கள் (1 சதம்), 11 டெஸ்ட் போட்டிகளில் 502 ரன்கள் குவித்துள் ளார். இரண்டு ஒருநாள் உலகக் கோப்பைகள் (2013, 2022), ஆறு டி-20 உலகக்கோப்பைகள் (2010, 2012, 2014, 2018, 2020, 2023) ஆஸ்திரேலிய அணிக்குப் பெற்றுத் தந்தவர். நெகிழ்ச்சியான தருணங்கள் தனது கடைசிப் போட்டியில் அலிசா ஹீலி பேட்டிங் செய்ய களமிறங்க வில்லை. இந்தியா குறைவான வெற்றி இலக்கை (25 ரன்கள்) நிர்ணயம் செய்த தால் ஆஸ்திரேலிய தொடக்க வீராங் கனைகளான ஜார்ஜியா வோல் மற்றும் லிட்ச்பீல்ட் ஆகியோர் வெற்றி இலக்கை எட்டினர். போட்டியின் முடி வில், சக வீராங்கனைகளான கார்ட்னர் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அலிசா ஹீலியைத் தங்கள் தோள் களில் சுமந்து மைதானத்தை வலம் வந்த காட்சி ரசிகர்களை நெகிழ்ச்சி யடையச் செய்தது. அலிசா ஹீலி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

போர் பதற்றம் எதிரொலி தோஹா கூட்டத்தை ஒத்திவைத்தது ஐசிசி

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வரும் மோதல் போக்கின் காரணமாக, மார்ச் 25 முதல் 27 வரை கத்தாரின் தோஹாவில் நடைபெறவிருந்த சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) மூன்று நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கிரிக்கெட் விளையாட்டு வளர்ந்து வருவதாலும், கத்தார் கிரிக்கெட் சங்கம் மற்றும் ஒலிம்பிக் கமிட்டியுடன் இணைந்து செயல்பட ஐசிசி ஆர்வம் காட்டுவதாலும் தோஹாவில் (கத்தார் தலைநகர்) கூட்டம் நடைபெற இருந்தது. சர்வதேச கிரிக்கெட்டின் தற்போதைய நிலை மற்றும் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க ஐசிசி வாரிய இயக்குநர்கள், தலைமை நிர்வாகிகள் மற்றும் குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவிருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.