முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
6 Jan 2026, 4:23 pm
<p><strong>முன்னாள் மாணவர்கள் சந்திப்பு</strong></p>
<p>நாமக்கல், ஜன.6- நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில், முன்னாள் மாணவர்கள் 45 ஆண்டு களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனர். நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிப்பு முதல் பேட்ச் கடந்த 1978 முதல் 1980 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. அப்போது பிளஸ் 2 முதல் பேட்ச்சில் படித்த, முன்னாள் மாண வர்கள் 45 ஆண்டுகளுக்குப்பிறகு சந்திப்பு நிகழ்ச்சி நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் தெற்கு மேல்நிலைப்பள்ளியில் படித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங் களில் காவல்துறை, கோவை வேளாண் பல்கலை, குடிநீர் வாரியம், சார்பதிவாளர் அலுவலகம், வங்கிகள், பொதுத்துறை நிறு வனங்கள் மற்றும் மருத்துவப்பணி, ஆசிரியர் பணி உள்ளிட்ட முக்கிய அரசு பதவிகளில் பணியாற்றி வந்தவர்கள் தற்போது 60 வயதை கடந்ததால் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களின் சேவையைப் பாராட்டி நிகழ்ச்சியில் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.</p>
